நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அரூர்: புரட்டாசி மாத சனிக்கிழமைகளில், மக்கள் விரத-மிருந்து தங்கள் குலதெய்வ மற்றும் பெருமாள் கோவில்களில் வழிபாடு நடத்துவது வழக்கம். இதனால், புரட்டாசி மாதம் முடியும் வரை அசைவ உணவை சாப்பிடுவதில்லை. இந்நி-லையில் புரட்டாசி முடிந்து, ஐப்பசி மாதத்தின் முதல் ஞாயிற்றுக்கிழமையான நேற்று, அரூரி-லுள்ள
இறைச்சி கடைகளில், ஆடு, கோழி, மீன் உள்ளிட்டவைகளின் விற்பனை வழக்கத்தை விட அதிகமாக இருந்ததாக வியாபாரிகள் தெரிவித்-தனர். அதே போல், கோபிநாதம்பட்டி கூட்ரோடு, மொரப்பூர், கே.ஈச்சம்பாடி, அச்சல்வாடி, நரிப்-பள்ளி உள்ளிட்ட இடங்களிலும், இறைச்சி கடை-களில் விற்பனை ஜோராக நடந்தது.

