ADDED : ஜூன் 03, 2026 03:10 AM
அ நிறம் | அளவு
அரூர்:தர்மபுரி மாவட்டம், அரூரில் இருந்து, திருவண்ணாமலை செல்லும் சாலையில், தெத்து முனியப்பன் கோவில் உள்ளது.
வனப்பகுதியில் அமைந்துள்ள இக்கோவிலில் இருந்து, இ.பி.தண்டா வரை, ஒன்றரை கி.மீ., துாரத்திற்கு, நரிப்பள்ளி, பையர்நாய்க்கன்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள இறைச்சி கடைகளில் இருந்து, கோழிக்கழிவுகள் சாக்கு மூட்டைகளில் எடுத்து வரப்பட்டு, சாலையோரத்தில் கொட்டப்படுகிறது. அவற்றை குரங்குகள் பிரித்து எறிவதால், அப்பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது. எனவே, வனப்பகுதியில் இறைச்சி கழிவுகள் கொட்டுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
