சாலையில் தேங்கி நிற்கும் மழைநீர் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் அவதி
சாலையில் தேங்கி நிற்கும் மழைநீர் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் அவதி
ADDED : ஜூன் 03, 2026 03:09 AM

தர்மபுரி:தர்மபுரி அருகே, நாயக்கன்கொட்டாய் பகுதி கிராம சாலையில் தேங்கி நிற்கும் மழைநீரால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் அவதிப்பட்டனர்.
தர்மபுரி ஒன்றியம், நாயக்கன்கொட்டாய் பஞ்., தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கம் அமைந்துள்ள பகுதியில் இருந்து, நத்தம் பகுதிக்கு செல்லும் சாலை உள்ளது. கடந்த இரு தினங்களுக்கு முன் பெய்த கனமழையில், சாலைகளில் மழைநீர் தேங்கி நிற்கிறது. இதனால், அவ்வழியாக வரும், கிராம மக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வருகின்றனர்.மேலும், தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கத்திற்கு கடந்தாண்டு, 20.46 லட்சம் ரூபாய் மதிப்பில், புதிதாக சுற்றுச்சுவர் கட்டப்பட்டது. தற்போது, தேங்கியுள்ள மழைநீரால் சுற்றுச்சுவரின் சில பகுதிகளில் சுவர் சேதமடைந்து வருகிறது. தொடந்து மழைநீர் தேங்கி நின்றால், சுற்றுச்சுவர் மேலும் சேதமடையும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, நாய்க்கன்கொட்டாய் பகுதிக்கு செல்லும் சாலையில், மழைநீர் தேங்காத வண்ணம் பஞ்., நடவடிக்கை எடுக்க, அப்பகுதி மக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
