/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
ஊராட்சி ஒன்றிய பள்ளியில் மருத்துவ விழிப்புணர்வு முகாம்
/
ஊராட்சி ஒன்றிய பள்ளியில் மருத்துவ விழிப்புணர்வு முகாம்
ஊராட்சி ஒன்றிய பள்ளியில் மருத்துவ விழிப்புணர்வு முகாம்
ஊராட்சி ஒன்றிய பள்ளியில் மருத்துவ விழிப்புணர்வு முகாம்
ADDED : ஆக 21, 2025 01:54 AM
பென்னாகரம், பென்னாகரம் அரசு தலைமை மருத்துவமனையில், இயங்கி வரும் யோகா மற்றும் இயற்கை மருத்துவம், சித்த மருத்துவம், ஹோமியோபதி மருத்துவம் சார்பில், பென்னாகரம் அடுத்த சின்னப்பள்ளத்துார் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில், விழிப்புணர்வு முகாம் நேற்று நடந்தது.
இதில், நம் உணவு முறை, சிறுதானிய உணவு, எளிய உடற்பயிற்சி, தன் சுத்தம், சுற்றுப்புற துாய்மை, யோகா, சித்த மருத்துவம், யோமியோபதி மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு கருத்துகள் பற்றி மருத்துவர்கள் மாணவர்களிடையே கலந்துரையாடினர். மாணவர்களுக்கு எளிய யோகாசனம், உடற்பயிற்சி, மனமகிழ் பயிற்சிகளை மருத்துவர்கள் வழங்கினர்.
நிகழ்வில், யோகா மற்றும் இயற்கை மருத்துவர் முனுசாமி, சித்த மருத்துவர் அன்புராணி, யோமியோபதி மருத்துவர் சங்கர், சிகிச்சை உதவியாளர் பிரியங்கா உள்ளிட்டோர் கலந்து கொண்டு பயிற்சி வழங்கினர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை தலைமை ஆசிரியர் பழனி செய்திருந்தார். சிறப்பு விருந்தினர்களுக்கு புத்தகம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் வட்டார வளமைய மேற்பார்வையாளர் மகேஷ், ஆசிரியர் பயிற்றுனர் இளங்கோவன், பள்ளி ஆசிரியர்கள் வளர்மதி, பழனிச்செல்வி, திலகவதி, அனுப்பிரியா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.