ADDED : நவ 01, 2024 01:10 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பாப்பிரெட்டிப்பட்டி, நவ. 1---
கடத்துார் அடுத்த அஸ்திகிரியூரில், அடிப்படை வசதிகளின்றி தவிக்கும் மக்களை, திசை திருப்பும் தீய பழக்கங்களில் இருந்து மீட்டு, விழிப்புணர்வு ஏற்படுத்த கடத்துார் போலீசார் மூலம், மனமகிழ் மன்றம் செயல்படுகிறது. இம் மன்றம் மூலம், அப்பகுதியில் உள்ள பள்ளி மாணவ, மாணவியருக்கு கடத்துார் அரசு மருத்துவமனையில் சிறப்பு மருத்துவ முகாம் நடந்தது.
டாக்டர் கனல்வேந்தன் தலைமையில் மருத்துவக்குழுவினர், கண் சிகிச்சை, தோல், ரத்த பரிசோதனை, சளி, காய்ச்சல் பரிசோதனை செய்தனர். பின் கபசுர குடிநீர் வழங்கினர். அனைவரும் காய்ச்சிய குடிநீரை பயன்படுத்த அறிவுறுத்தப்பட்டது.

