தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/தர்மபுரி/ மக்களை தேடி மருத்துவ ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

மக்களை தேடி மருத்துவ ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

மக்களை தேடி மருத்துவ ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்


ADDED : ஆக 13, 2026 03:11 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 13, 2026 03:11 AM


Follow on Google
அ நிறம் | அளவு

தர்மபுரி: தர்மபுரி மாவட்ட மக்களை தேடி மருத்துவ ஊழியர்கள் சங்கம் சார்பில், மாவட்ட சுகாதார பணிகள் துணை இயக்குனர் அலுவ-லகம் முன் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.

சங்க மாவட்ட தலைவர் திலகவதி தலைமை வகித்தார். சி.ஐ.டி.யு., மாநில துணைத்தலைவர் நாகராசன், மக்களை தேடி மருத்துவ ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் திலகவதி உட்பட பலர் கோரிக்கைகளை விளக்கி பேசினர்.

தமிழக அரசின் மக்கள் நல்வாழ்வு துறையில் செயல்படுத்தப்-படும் மக்களை தேடி மருத்துவம் திட்டத்தில், தமிழகத்தில் உள்ள நகர்ப்புறங்களில் 2,256 பேர், கிராமப்புறங்களில், 8,713 பேரும் கடந்த ஐந்து ஆண்டுகளாக பணிபுரிந்து வருகின்றனர். இவர்களிடம் திட்ட நடைமுறைக்கு மாறாக பல்வேறு பணிகளை கட்டாயப்படுத்தி, மேற்கொள்ளப்படுகிறது. மேலும், திட்டப் பணிகளுக்காக சொந்த பணத்தில் பெட்ரோல், நோட்டு, பேனா, பென்சில் உள்ளிட்ட பொருள்களுக்கு செலவு செய்ய வேண்டிய நிலை உள்ளது. இதனை மாத ஊதியமாக வழங்கப்படும், 5,500- ரூபாயில் இருந்து செலவு செய்ய வேண்டிய நிலை உள்ளது.

எனவே, மக்களைத்தேடி மருத்துவம் திட்ட ஊழியர்களுக்கு வழங்கப்படும் ஊக்கத்தொகையை, 5,500-த்தை, 15,000- ரூபாயாக உயர்த்தி வழங்கி, ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும், என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us