தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/தர்மபுரி/மஞ்சநாய்க்கன அள்ளியில் பெருங்கற்கால ஈம சின்னங்கள்

மஞ்சநாய்க்கன அள்ளியில் பெருங்கற்கால ஈம சின்னங்கள்

மஞ்சநாய்க்கன அள்ளியில் பெருங்கற்கால ஈம சின்னங்கள்


UPDATED : அக் 22, 2026 07:43 PM

ADDED : அக் 22, 2026 07:37 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 22, 2026 07:43 PM ADDED : அக் 22, 2026 07:37 PM


Follow on Google
அ நிறம் | அளவு

பென்னாகரம்: தர்மபுரி மாவட்டம், பென்னாகரம் அடுத்த மஞ்சநாயக்கனஅள்ளி எம்பாரன்கரடு, புளியங்கரம்பு பகுதியில், பெருங்கற்கால ஈம சின்னங்கள் குறித்து, பென்னாகரம் வரலாற்று மைய ஆசிரியர்கள் குழுவினர் முருகன், பெருமாள், கோவிந்தசாமி, சந்தோஷ்குமார், திருப்பதி ஆகியோர், களஆய்வு மேற்கொண்டனர். பெருங்கற்கால ஈம சின்னங்களை கண்டறிந்தனர்.

இது குறித்து, வரலாற்று ஆசிரியர்கள் கூறியதாவது:

பெருங்கற்காலம் நாகரீக வாழ்க்கையின் தொடக்க காலம். அக்கால மக்கள் இறந்தவர்களை அடக்கம் செய்யும் வழக்கத்தை கொண்டிருந்தனர். நினைவு சின்னங்களை அமைக்க, பெரிய பெரிய கற்களை பயன்படுத்தி உள்ளனர். இத்தகைய நினைவுச்சின்னங்களுக்கு கல்வட்டம், கல்திட்டை, கற்பது கை போன்ற பெயர்கள் உள்ளன.

இத்தகைய நினைவு சின்னங்கள் தர்மபுரி மாவட்டத்தில் அதிகளவில் காணப்படுகிறது. மஞ்சநாயக்கனஅள்ளி பகுதியில், 100க்கும் மேற்பட்ட சிறிய, பெரிய பெருங்கற்கால ஈமச்சின்னங்கள் உள்ளன. பெரும்பாலான கல்வட்டங்கள் எந்தவித சேதமுமின்றி முழுமையாக உள்ளன. இப்பகுதியில், புதிய கற்காலத்தை சார்ந்த கல் ஆயுதங்களும் கிடைத்தன. அவற்றை மக்கள், கோவில்களில் வைத்து தெய்வங்களாக வழிபடுகின்றனர்.

இவ்வாறு, அவர்கள் கூறினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us