/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
எம்.ஜி.ஆர்., சிலை அகற்றம் தடுக்க அ.ம.மு.க., மனு
/
எம்.ஜி.ஆர்., சிலை அகற்றம் தடுக்க அ.ம.மு.க., மனு
ADDED : ஆக 13, 2024 07:40 AM
தர்மபுரி: தர்மபுரி மாவட்ட கலெக்டரிடம், அ.ம.மு.க., அமைப்பு செய-லாளர் முருகன் நேற்று அளித்த மனுவில் தெரிவித்துள்ளதாவது: தர்மபுரி மாவட்டம், அரூர் பஸ் ஸ்டாண்டில் கடந்த, 1988ல் எம்.ஜி.ஆர்., சிலை நிறுவப்பட்டது. இதில், எம்.ஜி.ஆர்., பிறந்த நாள் மற்றும் நினைவு நாளில் பல்வேறு அரசியல் கட்சியினர், பொதுமக்கள் அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர். தற்போது, அரூர் பஸ் ஸ்டாண்ட் கட்டு-மான பணிகள் நடந்து வரும் நிலையில், ஒரு சிலர் அரசியல் காழ்ப்புணர்ச்சியுடன், எம்.ஜி.ஆர்., சிலையை அகற்ற முயற்சி செய்வது தெரிய வருகிறது.
இதில், எவ்வித இடையூறும் இன்றி நிறுவப்பட்டுள்ள சிலையால், பொதுமக்கள் மற்றும் போக்குவரத்திற்கு பாதிப்புகள் இல்லை. எனவே, எம்.ஜி.ஆர்., சிலைக்கு எந்தவித இடையூறும் ஏற்படுத்தக்கூடாது, அதை அகற்றாதிருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு, தெரிவித்துள்ளார்.

