/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
விபத்தில் பால் நிறுவன மேலாளர் பலி
/
விபத்தில் பால் நிறுவன மேலாளர் பலி
ADDED : அக் 24, 2024 02:18 AM
பாப்பிரெட்டிப்பட்டி: பாப்பிரெட்டிப்பட்டி அடுத்த பையர்நத்தத்தை சேர்ந்தவர் விஜய-குமார், 37; எம்.எஸ்சி., பி.எட்., பட்டதாரி. இவர், தேவராஜ்
பாளையத்தில் உள்ள தனியார் பால் நிறுவனத்தில் கடந்த, 4 ஆண்டுகளுக்கு மேலாக மேலாளராக பணியாற்றி வந்தார்.
நேற்று முன்தினம் இரவு, 10:30 மணிக்கு பணி முடிந்து, பாப்பி-ரெட்டிப்பட்டி --- பொம்மிடி ரோட்டில், தன் ஹீரோ ஸ்பிளன்டர் பிளஸ் பைக்கில் ஹெல்மெட் அணியாமல், வந்தார்.தேவராஜ்பாளையம் கருப்புசாமி கோவில் அருகே சாலையோர புளிய மரத்தின் மீது பைக் மோதியதில், விஜயகுமார் முகத்தில் படுகாயம் ஏற்பட்டு உயிரிழந்தார். மனைவி இந்துமதி புகார் படி, பாப்பிரெட்டிப்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர். விஜயகுமாருக்கு மகன், மகள் உள்ளனர்.

