/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
வெள்ளத்தால் செலம்பை கிராமம் துண்டிப்பு உயர்மட்ட பாலம் அமைக்க அமைச்சர் உறுதி
/
வெள்ளத்தால் செலம்பை கிராமம் துண்டிப்பு உயர்மட்ட பாலம் அமைக்க அமைச்சர் உறுதி
வெள்ளத்தால் செலம்பை கிராமம் துண்டிப்பு உயர்மட்ட பாலம் அமைக்க அமைச்சர் உறுதி
வெள்ளத்தால் செலம்பை கிராமம் துண்டிப்பு உயர்மட்ட பாலம் அமைக்க அமைச்சர் உறுதி
ADDED : டிச 03, 2024 01:40 AM
வெள்ளத்தால் செலம்பை கிராமம் துண்டிப்பு
உயர்மட்ட பாலம் அமைக்க அமைச்சர் உறுதி
அரூர், டிச. 2-
அரூர் அருகே வெள்ளத்தால் செலம்பை கிராமம் துண்டிக்கப்பட்ட நிலையில், அங்கு உயர்மட்ட பாலம் அமைக்கப்படும் என, சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன் உறுதியளித்தார்.
தர்மபுரி மாவட்டம், அரூர் அடுத்த கோட்டப்பட்டி பஞ்.,க்கு உட்பட்டது செலம்பை. இங்கு, 120க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். கள்ளக்குறிச்சி, சேலம், விழுப்புரம் மற்றும் தர்மபுரி மாவட்ட எல்லை பகுதியில், கல்வராயன் மலை அடிவாரத்தில் அமைந்துள்ளது. கடந்த, 2 நாட்களாக பெய்து வரும் கனமழையால், ஆவலுார் - செலம்பை இடையே உள்ள காட்டாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால், காட்டாற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள தரைப்பாலம் நீரில் மூழ்கி, போக்குவரத்து முற்றிலும் துண்டிக்கப்பட்டு, செலம்பை கிராமம் தனி தீவாக மாறியது.
நேற்று மதியம், 2:30 மணிக்கு சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன் வெள்ளத்தால் துண்டிக்கப்பட்ட செலம்பை கிராம மக்களை சந்தித்து ஆறுதல் கூறியதுடன், அவர்களுக்கு உணவு, பிஸ்கட், பால் ஆகியவற்றை வழங்கினார். மேலும், காட்டாற்றின் குறுக்கே உயர்மட்ட பாலம் கட்டுவதற்கு முதல்வரிடம் பரிந்துரைக்கப்படும் என உறுதியளித்தார்.
ஆய்வின்போது, மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மற்றும் தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவன மேலாண்மை இயக்குனர் திவ்யதர்ஷினி, கலெக்டர் சாந்தி, தர்மபுரி மேற்கு மாவட்ட தி.மு.க., செயலாளர் பழனியப்பன், அரூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் சந்திரமோகன், மாவட்ட ஜ.டி., விங் ஒருங்கிணைப்பாளர் தமிழழகன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.