/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
மாயமான மேஸ்திரி சடலமாக மீட்பு: கொலையா போலீஸ் விசாரணை
/
மாயமான மேஸ்திரி சடலமாக மீட்பு: கொலையா போலீஸ் விசாரணை
மாயமான மேஸ்திரி சடலமாக மீட்பு: கொலையா போலீஸ் விசாரணை
மாயமான மேஸ்திரி சடலமாக மீட்பு: கொலையா போலீஸ் விசாரணை
ADDED : மே 30, 2025 01:34 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பாலக்கோடு :தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு அடுத்த வெள்ளிச்சந்தையை சேர்ந்தவர் சங்கர், 45, கட்டட மேஸ்திரி; மனைவியை பிரிந்து வாழ்ந்து வந்தார். குடிப்பழக்கம் கொண்ட சங்கர் கடந்த, 3 நாட்களுக்கு முன், அப்பகுதியில் நடந்து சென்றவர் வீடு திரும்பவில்லை.
இந்நிலையில் வெள்ளிச் சந்தை பகுதியில் நேற்று சாலையோர சாக்கடை கால்வாயில், அழுகிய நிலையில் சங்கர் உடல் கிடந்துள்ளது. தகவலின் படி, சம்பவ இடத்திற்கு வந்த மகேந்திரமங்கலம் போலீசார், சங்கரின் உடலை மீட்டு, அவர் குடிபோதையில் நிலைதடுமாறி சாக்கடையில் விழுந்து உயிரிழந்தாரா, அல்லது கொலை செய்யப்பட்டாரா என, விசாரித்து வருகின்றனர்.