மாயமான மனநலம் குன்றியவர் வனப்பகுதியில் சடலமாக மீட்பு
மாயமான மனநலம் குன்றியவர் வனப்பகுதியில் சடலமாக மீட்பு
ADDED : ஜூலை 23, 2026 01:40 AM
தர்மபுரி: தர்மபுரி மாவட்டம், பென்னாகரம் தாலுகா, அத்திமரத்துாரை சேர்ந்தவர் பெருமாள், 39, விவசாயி. இவரது தாய் கடந்த, 5 ஆண்டுகளுக்கு முன் இறந்த நிலையில், தந்தை, தம்பிகளுடன் வசித்து வந்தார்.
இவரது தம்பி சுப்பிரமணி, 36, மனநலம் குன்றியவர். இவர் வீட்-டருகே வனப்பகுதி வழியாக கலப்பம்பாடி, கொப்பளூர் உள்-ளிட்ட பகுதிகளில் சுற்றித்திரிந்து விட்டு, இரவு வீட்டிற்கு வரு-வது வழக்கம். கடந்த, 12ல், வழக்கம்போல் வீட்டிலிருந்து வெளியில் சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. அவரை எங்கு தேடியும் காணவில்லை. இது குறித்து பெருமாள் பெரும்-பாலை போலீசில் புகார் அளித்தார். நேற்று முன்தினம் கலப்பம்பாடி வனப்பகுதியை ஒட்டி ஒரு ஆண் சடலம் கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. மேலும், அது மாயமான சுப்பிரமணி என்பதும் தெரிந்தது. சட-லத்தை மீட்ட போலீசார், வனப்பகுதிக்குள் நீண்ட துாரம் சென்று, திரும்புவதற்கு வழி தெரியாமல், மயங்கி விழுந்து இறந்தாரா அல்லது யானை தாக்கி இறந்தாரா என்பது குறித்து விசாரிக்கின்-றனர்.
