ADDED : ஜூலை 14, 2025 04:18 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தர்மபுரி: தர்மபுரி மாவட்டம், அரூர் துாரணம்பட்டியை சேர்ந்தவர் காளிதாஸ், 23. அவர் மனைவி இலக்கியாவை கடந்த, 10 அன்று தர்மபுரி அரசு மருத்துவமனையில் மகப்பேறு சிகிச்சைக்காக மருத்-துவமனையில் சேர்த்தார். பின், காத்திருப்போர் அறையில் தங்கி இருந்தார்.
கடந்த, 12 அன்று காளிதாசின், மொபைல் காணாமல் போனது. மொபைல் செயலி மூலம், மொபைல் இருக்கும் இடத்தை கண்டறிந்து, மொபைலை திருடிய நபரை பிடித்து தர்ம-புரி டவுன் போலீசில் ஒப்படைத்தார். போலீசார் விசாரணையில், பென்னாகரம் அடுத்த, திகிலோடு பகுதியை சேர்ந்த பழனிசாமி, 39 என்பது தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்தனர்.