/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
புத்தக திருவிழாவில் பங்கேற்ற மாணவர்களுக்கு உண்டியல் பரிசு
/
புத்தக திருவிழாவில் பங்கேற்ற மாணவர்களுக்கு உண்டியல் பரிசு
புத்தக திருவிழாவில் பங்கேற்ற மாணவர்களுக்கு உண்டியல் பரிசு
புத்தக திருவிழாவில் பங்கேற்ற மாணவர்களுக்கு உண்டியல் பரிசு
ADDED : செப் 30, 2025 02:16 AM
தர்மபுரி தர்மபுரி மாவட்டம், பென்னாகரம் ஒன்றியம், சின்னப்பள்ளத்துார் ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளியை சேர்ந்த, 60 மாணவர்கள், தர்மபுரியில் நடக்கும் புத்தக திருவிழாவில் நேற்று கலந்து கொண்டனர். இதில், சிறார்களுக்கான நுால்களான, கதை புத்தகங்களை, மாணவர்கள் தேடித்தேடி வாங்கினர்.
மேலும், பள்ளி மாணவர்களிடையே சிறு சேமிப்பு பழக்கத்தை ஊக்குவிக்கும் விதமாக, மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக, சிறு சேமிப்புக்காக, மாணவர்களுக்கு உண்டியல் பரிசாக வழங்கப்பட்டது. இந்த உண்டியலில் சேமிக்கும் பணத்தை வைத்து, அடுத்த ஆண்டு நடக்கும் புத்தக திருவிழாவில், புத்தகங்கள் வாங்க வேண்டுமென, மாணவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.
இதற்கான ஏற்பாடுகளை தலைமை ஆசிரியர் பழனி செய்திருந்தார். பள்ளி ஆசிரியர்கள் கல்பனா, ராஜேஷ்வரி, ஸ்டெம் -வானவில் மன்ற ஆசிரியர் வைகுந்தம் ஆகியோர் உடனிருந்தனர்.