/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
மூப்பனாரின் 94வது பிறந்தநாள் விழா
/
மூப்பனாரின் 94வது பிறந்தநாள் விழா
ADDED : ஆக 20, 2025 01:38 AM
தர்மபுரி, த.மா.கா., நிறுவனர் மூப்பனாரின், 94வது பிறந்தநாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது. இதில், தர்மபுரி மாவட்டத்தில் புறநகர் பஸ் ஸ்டாண்ட் அருகில், காமராஜர் சிலை முன், வைக்கப்பட்டிருந்த மூப்பனார் உருவ படத்திற்கு, தர்மபுரி மாவட்ட தலைவர் புகழ் தலைமையில் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினர். இதில், மாநில இளைஞரணி செயலாளர் சங்கர் கணேஷ், மாவட்ட துணைத் தலைவர் வளையாபதி, மாவட்ட பொது செயலாளர் பாபு, இளைஞரணி தலைவர் நவீன், மகளிர் அணி தலைவி செல்வி, நகர தலைவர் ரமேஷ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
கொசு ஒழிப்பு பணிபாப்பிரெட்டிப்பட்டி, ஆக. 20
கடத்துார் யூனியனுக்கு உட்பட்ட, தாளநத்தம், ராமியன ஹள்ளி, குருபரஹள்ளி ஆகிய கிராமங்களில் பொது சுகாதாரத்துறை சார்பில், கொசு ஒழிப்பு பணி நடந்தது. மழைக்காலங்களில் கொசு பரவலை தடுக்கும் பொருட்டு, குடியிருப்பு பகுதியில் உள்ள கழிவுகளை அகற்றுதல், பழைய பிளாஸ்டிக் கழிவுகள், டயர்கள் அகற்றுதல், கழிவு தேங்கிய இடங்களில் பிளீச்சிங் பவுடர் தெளித்தல், குடிநீர் தொட்டிகள் மூடி வைத்தல் ஆகிய பணிகள் நடந்தன. இதில், கொசு ஒழிப்பு பணியாளர்கள் ஈடுபட்டனர்.