/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
நெடுஞ்சாலை ஆக்கிரமிப்புகள் சீரமைக்க எம்.பி., அறிவுறுத்தல்
/
நெடுஞ்சாலை ஆக்கிரமிப்புகள் சீரமைக்க எம்.பி., அறிவுறுத்தல்
நெடுஞ்சாலை ஆக்கிரமிப்புகள் சீரமைக்க எம்.பி., அறிவுறுத்தல்
நெடுஞ்சாலை ஆக்கிரமிப்புகள் சீரமைக்க எம்.பி., அறிவுறுத்தல்
ADDED : ஏப் 28, 2025 07:42 AM
தொப்பூர்: தர்மபுரி, தொப்பூர் பகுதியில் சேதமடைந்த சாலை மற்றும் பராமரிப்பில்லாத வாரச்சந்தை வளாகம், நெடுஞ்சாலையில் ஆக்கிரமிப்பால், போக்குவரத்து பாதிப்பு உள்ளிட்டவை குறித்து, தர்மபுரி, தி.மு.க., - எம்.பி.,யிடம் மனு அளித்திருந்தனர். இது குறித்து, ஆய்வு செய்ய நேற்று அவர் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.
அதில், தொப்பூர் முதல் தர்கா செல்லும் சாலை சேதமடைந்து, மண்சாலையாக மாறி இருந்தது. முதல் கட்டமாக ஒரு கிலோ மீட்டருக்கு தார்ச்சாலை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார். தொடர்ந்து, தொப்பூரில் பிரதி திங்களன்று நடக்கும் வாரச்சந்தை முன், நெடுஞ்சாலையில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளதால், போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதை ஆய்வு செய்து, நெடுஞ்சாலை ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்ற, அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். அதேபோல், வாரச்சந்தை வளாகம் பராமரிப்பின்றி சிதிலமடைந்து காணப்பட்டது. மேலும், பயன்பாட்டில் இல்லாத கழிவறையை சீரமைக்க, நல்லம்பள்ளி பி.டி.ஓ., இளங்குமரனுக்கு மொபைலில் தொடர்பு கொண்டு அறிவுறுத்தினார். மேலும், ஆக்கிரமிப்பு அகற்றம் மற்றும் பராமரிப்பு பணிகளை, தான் நேரில் வந்து பார்வையிடுவதாக அதிகாரிகளிடம் தெரிவித்தார்.

