/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
சேறும் சகதியுமான சாலை; மாணவர்கள் அவதி
/
சேறும் சகதியுமான சாலை; மாணவர்கள் அவதி
ADDED : நவ 01, 2024 01:12 AM
சேறும் சகதியுமான சாலை; மாணவர்கள் அவதி
தர்மபுரி, நவ. 1-
தர்மபுரி அடுத்த, முக்கல்நாயக்கன்கொட்டாய் பஞ்.,க்கு உட்பட்ட ஆலிவாயன்கொட்டாயில் அரசினர் துவக்கப்பள்ளி உள்ளது. இங்கு, 70க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் படிக்கின்றனர். இப்பள்ளிக்கு, செல்லும் சாலை, கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழையால் சேறும், சகதியுமாக உள்ளதால், மாணவர்கள் அவதிப்பட்டு வருகின்றனர். சகதியில் சென்று வருவதால் மாணவர்களுக்கு உடல்நிலை பாதிப்பு ஏற்படுவதாக பெற்றோர் தெரிவிக்கின்றனர். இச்சாலையில் உள்ள ரேஷன் கடைக்கு வரும், 200க்கும் மேற்பட்ட குடும்பகார்டுதாரர்களும் இந்த சகதி சாலையில்தான் சென்று வருகின்றனர்.
இதுகுறித்து பஞ்., நிர்வாகத்துக்கு பலமுறை கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை இல்லை. எனவே, பள்ளி மாணவர்கள் மற்றும் பொதுமக்களின் நலன்கருதி சேறும், சகதியுமாக உள்ள இச்சாலையை சீரமைக்க பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.