/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
'தந்தை பெரியார் சதுக்கம்' பெயருக்கு எதிர்ப்பு முனீஸ்வர் நகர் சர்க்கிள் மீட்பு குழுவினர் கைது

ADDED : ஜூன் 04, 2025 01:40 AM
ஓசூர், ஓசூரில், 'தந்தை பெரியார் சதுக்கம்' பெயருக்கு எதிர்ப்பு தெரிவித்து, உண்ணாவிரத போராட்டம் நடத்த வந்த, எட்டு பேரை போலீசார் கைது செய்தனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் இன்னர் ரிங்ரோட்டில், முனீஸ்வர் நகர், வ.உ.சி., நகர், நியூ ஏ.எஸ்.டி.சி., ஹட்கோ ஆகிய பகுதிகளுக்கு செல்லும் சாலைகள் சந்திக்கும் பகுதி, 'முனீஸ்வர் நகர் சர்க்கிள்' என அழைக்கப்பட்டது. ஓசூர் மாநகராட்சி கூட்டத்தில் அப்பகுதிக்கு, 'தந்தை பெரியார் சதுக்கம்' என தீர்மானம் நிறைவேற்றி, கடந்த ஜன., 21ம் தேதி பெயர் பலகை திறக்கப்பட்டது. இதற்கு ஹிந்து அமைப்புகள் மற்றும் குடியிருப்புவாசிகள் ஒருதரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மேலும், முனீஸ்வர் நகர் சர்க்கிள் மீட்பு குழு என, ஒரு அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது.
இக்குழுவினர், 'தந்தை பெரியார் சதுக்கம்' என்ற பெயரை நீக்கி விட்டு, 'முனீஸ்வர் நகர் சர்க்கிள்' என பெயர் வைக்க வலியுறுத்தி, தலைவர் ராமசாமி தலைமையில், நேற்று காலை ஓசூர் சப்-கலெக்டர் அலுவலகம் முன் உண்ணாவிரத போராட்டம் நடத்த வந்தனர். ஓசூர் டவுன் போலீசார், அவர்களை தடுத்தனர். தலைவர் ராமசாமி உள்ளிட்ட எட்டு பேரை கைது செய்து, மாலையில் விடுவித்தனர்.