ADDED : டிச 30, 2025 05:56 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஒகேனக்கல்: பாப்பாரப்பட்டி பேரூராட்சியில், புதிய பஸ் ஸ்டாண்ட் கடை குத்தகை உரிமம் நீட்டிப்பதில் முறைகேடு தொடர்பாக, மா.கம்யூ., கட்சியினர் நேற்று, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
வட்டார செயலாளர் சக்திவேல் தலைமை வகித்தார். பகுதிக்குழு உறுப்பினர் சிலம்பரசன் முன்னிலை வகித்தார். மாவட்ட குழு உறுப்பினர் சின்னசாமி கண்டன உரையாற்றினார். ஆர்ப்பாட்டத்தில், கடை குத்தகை உரிமம் நீட்டித்து குறித்த பேரூராட்சி தீர்மானத்தைக் கைவிடக்கோரியும், பாப்பாரப்பட்டி பேரூராட்சியில் வடிக்கால், சாலை அமைக்கும் பணி, குடிநீர் திட்ட பணிகளை தாமதமின்றி முடிக்க வேண்டும் எனக்கூறி கோஷம் எழுப்பினர்

