ADDED : டிச 31, 2025 06:33 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பென்னாகரம்: பென்னாகரம் அடுத்த பி.அக்ரஹாரத்தில் உள்ள முனியப்பன் கோவிலில் மார்கழி, 2-வது செவ்-வாய்க்கிழமையையொட்டி ஆயிரக்கணக்கான ஆடுகள், கோழிகளை பலியிட்டு பக்தர்கள் தங்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர்.
நேற்று, அதிகாலை பொங்கல் வைத்து சுவாமிக்கு சிறப்பு வழிபாடு நடத்தினர். தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம் மற்றும் கர்நாடகா, ஆந்திரா மாநில பக்தர்கள் கலந்து கொண்டனர். விரதமிருந்து இருமுடி கட்டிய பக்-தர்கள் கோவிலில் சிறப்பு வழிபாடு நடத்தினர். பக்தர்கள் அலகு குத்தி வந்தனர். மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் இருந்து பி.அக்ரஹாரத்-துக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.

