/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
போதை பொருள் தடுப்பு பிரிவில் மோப்ப நாய் 'அதிபன்' சேர்ப்பு
/
போதை பொருள் தடுப்பு பிரிவில் மோப்ப நாய் 'அதிபன்' சேர்ப்பு
போதை பொருள் தடுப்பு பிரிவில் மோப்ப நாய் 'அதிபன்' சேர்ப்பு
போதை பொருள் தடுப்பு பிரிவில் மோப்ப நாய் 'அதிபன்' சேர்ப்பு
ADDED : டிச 31, 2025 06:32 AM

தர்மபுரி: போதை பொருட்கள் தடுப்பு நடவடிக்கைக்காக, தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டத்திற்கும் ஒரு மோப்பநாய் வழங்க, தமிழக அரசு உத்தரவிட்டது. அதை தொடர்ந்து, தர்மபுரி மாவட்ட துப்பறியும் மோப்ப நாய் பிரிவிற்கு, மோப்ப நாய்க்குட்டி ஒன்று வழங்கப்பட்டது. அந்த நாய் குட்டிக்கு, தர்மபுரி மாவட்ட எஸ்.பி., மகேஷ்வரன், 'அதிபன்' என பெயர் சூட்டினார். அதையடுத்து, நாய்குட்டி பயிற்சிக்கு அனுப்பப்பட்டது.
சென்னையில், போதை பொருட்கள் தடுப்பு நடவடிக்கை தொடர்பாக, 6- மாதம் அடிப்படை மற்றும் சிறப்பு பயிற்சிகள் முடிவடைந்தது. மாவட்ட எஸ்.பி., மகேஷ்வரன் முன்னிலையில், துப்பறியும் மோப்ப நாய் பயிற்சியாளர் கலிமுல்லா, குருநாதன் மற்றும் மோப்ப நாய் பிரிவு எஸ்.ஐ., லோகநாதன் ஆகியோரிடம் ஒப்படைக்கபட்டது. நேற்று முதல், போதை பொருள் தடுப்பு பணியில் மோப்ப நாய், 'அதிபன்' சேர்க்கப்பட்டது.துாய்மை பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்
தர்மபுரி, டிச. 31
தர்மபுரி மாவட்ட பள்ளிக்கல்வித்துறை துாய்மை பணியாளர்கள் சங்கம் சார்பில், கலெக்டர் அலுவலகம் அருகே, நேற்று ஆர்ப்-பாட்டம் நடந்தது. சங்க மாவட்ட தலைவர் சுப்பு தலைமை வகித்தார். செயலாளர் ரவிச்சந்திரன், துணை செயலாளர் பிரதாபன் கோரிக்கை குறித்து பேசினர்.
அரசு பள்ளி துாய்மை பணியாளர்களுக்கு அடிப்-படை சம்பளம், அகவிலைப்படி என்ற அடிப்ப-டையில், 12,503 ரூபாய் வழங்க வேண்டும். பணி-யிலுள்ள அனைவரையும் பணி நிரந்தரம் செய்ய வேண்டும், என்பன உட்பட பல்வேறு கோரிக்கை-களை வலியுறுத்தினர்.

