/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
விநாயகர் சிலை வழங்கி இஸ்லாமியர் வாழ்த்து
/
விநாயகர் சிலை வழங்கி இஸ்லாமியர் வாழ்த்து
ADDED : ஆக 28, 2025 01:12 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஓசூர், ஓசூரில் நேற்று, விநாயகர் சதுர்த்தி விழா வெகுவிமர்சையாக கொண்டாடப்பட்டது.
ஓசூர் ராம்நகரில் அமைக்கப்பட்டிருந்த ஸ்ரீபால விநாயகர் பக்த மண்டலி செட்டிற்கு வந்த, ஓசூர் பகுதி இஸ்லாமியர்கள், மதநல்லிணக்கத்தை வலியுறுத்தும் வகையில், ஹிந்து பக்தர்களுக்கு விநாயகர் சிலைகளை வழங்கி, வாழ்த்து தெரிவித்தனர்.
பின்னர், அங்கு அமைக்கப்பட்டுள்ள பிரமாண்ட விநாயகரை வணங்கி, பிரசாதங்களை வாங்கி சென்றனர். இஸ்லாமியர்களும், ஹிந்துக்களும் ஒன்று என்ற, ஒருமைப்பாட்டை தெரிவிக்கும் விதமாக இந்த நிகழ்ச்சி அமைந்தது.