/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
பராமரிப்பின்றி சிறுவர் பூங்கா தீ வைக்கும் மர்ம நபர்கள்
/
பராமரிப்பின்றி சிறுவர் பூங்கா தீ வைக்கும் மர்ம நபர்கள்
பராமரிப்பின்றி சிறுவர் பூங்கா தீ வைக்கும் மர்ம நபர்கள்
பராமரிப்பின்றி சிறுவர் பூங்கா தீ வைக்கும் மர்ம நபர்கள்
ADDED : ஆக 09, 2025 01:53 AM
ஓசூர், கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் மாநகராட்சி, 41 வது வார்டில், ரிங்ரோடு சாலையோரம் சிறுவர் பூங்கா உள்ளது. இங்கு காலை, மாலை நேரங்களில் அப்பகுதி மக்கள் நடைபயிற்சி செல்கின்றனர். சிறுவர், சிறுமியர் பயன்படுத்த அமைக்கப்பட்டிருந்த விளையாட்டு உபகரணங்கள் வீணாகியுள்ளன. மேலும், காம்பவுண்ட் சுவர் இடிக்கப்பட்டுள்ளதுடன், அங்கிருந்த, 'சிசிடிவி' கேமராக்களும் உடைக்கப்பட்டுள்ளன.
இரவில் மக்கள் பூங்காவிற்கு வர முடியாத அளவிற்கு இருள் சூழ்ந்து காணப்படுகிறது. மாநகராட்சி நிர்வாகத்திடம் பலமுறை கூறியும், பூங்காவிற்கு மின்விளக்கு வசதி செய்யப்
படவில்லை. அதனால், இரவில் சமூக விரோதிகள் கூடாரமாக மாறி, மது அருந்தும் இடமாகியுள்ளது. அங்குள்ள குப்பைகளுக்கு தீ வைத்து, இரவில் சமூக விரோதிகள் குளிர் காய்கின்றனர்.
இது குறித்து, அப்பகுதி, அ.தி.மு.க., கவுன்சிலர் குபேரன் கூறும் போது, ''பலமுறை புகார் கூறியும் மாநகராட்சி கண்டுகொள்ளாமல் உள்ளது. மாநகராட்சி நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுத்து, மின்விளக்கு வசதி செய்து, சமூக விரோதிகள் நடமாட்டத்தை தடுக்காவிட்டால், மக்களை திரட்டி போராட்டம் நடத்தப்படும்,'' என்றார்.