/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
சர்வதேச வீரர்களை உருவாக்க தர்மபுரியில் தேசிய செஸ் போட்டி
/
சர்வதேச வீரர்களை உருவாக்க தர்மபுரியில் தேசிய செஸ் போட்டி
சர்வதேச வீரர்களை உருவாக்க தர்மபுரியில் தேசிய செஸ் போட்டி
சர்வதேச வீரர்களை உருவாக்க தர்மபுரியில் தேசிய செஸ் போட்டி
ADDED : நவ 07, 2024 01:25 AM
சர்வதேச வீரர்களை உருவாக்க
தர்மபுரியில் தேசிய செஸ் போட்டி
தர்மபுரி, நவ. 7-
தர்மபுரி மாவட்ட, செஸ் அசோசியேஷன் புதிய நிர்வாகிகள் தேர்வு கடந்த மாதம், 27ல் நடந்தது. மாவட்ட தலைவராக விஜய் வித்யாலயா கல்வி குழும தலைவர் மணிவண்ணன் மீண்டும் தேர்வு செய்யப்பட்டார். செயலாளராக, தமிழ்நாடு மாநில செஸ் சங்க இணை செயலாளர் ராஜசேகரன், பொருளாளராக சேகர் மற்றும் இணை செயலாளராக மாதேஷ், சிலம்பரசன் ஆகியோர் தேர்வாகினர். அவர்கள் நேற்று முன்தினம் பொறுப்பேற்றனர்.
தர்மபுரி மாவட்ட செஸ் அசோசியேஷன் தலைவர் மணிவண்ணன் நிருபர்களிடம் கூறியதாவது:
தர்மபுரி மாவட்ட செஸ் அசோசியேசன் சார்பாக, 2024ல் மாநில அளவில், 6 செஸ் போட்டிகள் நடத்தப்பட்டது. ஏற்கனவே, மாவட்ட அளவில் நடந்த போட்டியில்
தேர்வானவர்கள் மாநில போட்டியில் பங்கேற்றனர். வரும், 2025-ல்
தர்மபுரியில், 10 இடங்களில் மாநில போட்டிகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. மாவட்டத்தில், ஜூனியர் நிலையிலான, 9 வயதுக்கு கீழ் உள்ளவர்கள் செஸ் போட்டியில் நன்கு திறமை பெற்றவர்களாக உள்ளனர். உலக அளவிலான, செஸ் போட்டியில் இந்தியா சிறந்து விளங்குகிறது. அதில், தமிழகம் முன்னிலையில் உள்ளது.
மாவட்டத்தில், திறமையுள்ள செஸ் வீரர்களை வெளிக்கொணர, சர்வதேச செஸ் போட்டிகள் வரும் காலத்தில் தர்மபுரியில் நடத்தப்படும். அதற்காக, கிரான்ட் மாஸ்டர்களை அழைத்து வந்து, சிறப்பு பயிற்சி அளிக்கப்படும். அரசு பள்ளி மாணவர்களின் திறமைகளை வெளிக்கொணர, வரும் ஜன.,ல் மாவட்ட செஸ் போட்டி நடத்தப்பட உள்ளது. இதில், வெற்றி பெறும் அரசு பள்ளி மாணவர்கள், மாநில போட்டியில் பங்கேற்க உள்ளனர். தர்மபுரியிலிருந்து, சர்வதேச செஸ் வீரர்களை உருவாக்குவதை இலக்காக கொண்டுள்ளோம்.
இவ்வாறு, அவர் கூறினார்.