/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
வல்லபபாய் பட்டேல் பிறந்தநாள் தேசிய ஒற்றுமை பேரணி
/
வல்லபபாய் பட்டேல் பிறந்தநாள் தேசிய ஒற்றுமை பேரணி
ADDED : நவ 02, 2025 02:29 AM
தர்மபுரி, மத்திய அரசின் மை பாரத் சார்பில், சர்தார் வல்லபபாய் பட்டேலின், 150வது பிறந்தநாளையொட்டி, தேசிய ஒற்றுமை விழிப்புணர்வு பேரணி, தர்மபுரியில் நேற்று நடந்தது.
இந்திய அரசு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம், மை பாரத் கேந்திரங்கள் மூலம், நாடு முழுவதும் உள்ள அனைத்து மாவட்டங்களிலும், சர்தார் வல்லபபாய் பட்டேலின், 150வது பிறந்தநாளையொட்டி, தேசிய ஒற்றுமை பாதயாத்திரை நடந்து வருகிறது.
இதன் ஒருபகுதியாக, தர்மபுரி மாவட்டத்திலுள்ள மை பாரத் மற்றும் அரசு கலைக் கல்லுாரி இணைந்து, சர்தார் வல்லபபாய் பட்டேல் பிறந்தநாளையொட்டி ஏற்பாடு செய்திருந்த தேசிய ஒற்றுமை விழிப்புணர்வு பேரணியை தர்மபுரி, பா.ம.க., -- எம்.எல்.ஏ., வெங்கடேஷ்வரன் தொடங்கி வைத்தார். இதில், ஏராளமான கல்லுாரி மாணவ, மாணவியர் தேசியக்கொடியை
ஏந்தி, வல்லபபாய் படேலின் பெருமைகளை பறைசாற்றும் பதாகைகளை ஏந்திச்சென்றனர்.
இதில், மை பாரத் தர்மபுரியின் துணை இயக்குனர் ட்ரவீன் சார்லஸ்டன் மற்றும் தர்மபுரி அரசு கலைக் கல்லுாரியின் நாட்டு நலப்பணி திட்ட அலுவலர் குப்புசாமி ஆகியோர் பங்கேற்றனர்.

