/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
அரூர் அரசு கல்லுாரியில் இயற்கை பாதுகாப்பு தினம்
/
அரூர் அரசு கல்லுாரியில் இயற்கை பாதுகாப்பு தினம்
ADDED : ஜூலை 29, 2025 01:47 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அரூர், அரூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில், உலக இயற்கை பாதுகாப்பு தினம் கொண்டாடப்பட்டது.
இளைஞர் செஞ்சிலுவை சங்கம் சார்பில் நடந்த விழாவிற்கு, கல்லுாரி முதல்வர் மங்கையர்க்கரசி தலைமை வகித்தார். இதில் இயற்கை பாதுகாப்பு குறித்து அரூர் வனச்சரக அலுவலர் கணேஷ், அரூர் சமூக காடுகள் மற்றும் விரிவாக்க விளம்பர சரக வனவர் சந்திரசேகர், அரூர் எஸ்.ஐ., நாகராஜன், தாவரவியல் துறைத்தலைவர் குமரன் ஆகியோர் பேசினர். விழாவில், மாணவ, மாணவியர் மற்றும் பேராசிரியர்கள் கலந்து கொண்டனர்.