தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/தர்மபுரி/வேப்பங்கொட்டை விலை சரிவு

வேப்பங்கொட்டை விலை சரிவு

வேப்பங்கொட்டை விலை சரிவு


ADDED : ஜூலை 18, 2024 01:52 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 18, 2024 01:52 AM


Follow on Google
அ நிறம் | அளவு

அரூர்: அரூர் பகுதியில், சில தனியார் உர நிறுவனங்கள் வேப்பங்-கொட்டை கொள்முதல் செய்யாததால், அதன் விலை சரிவடைந்-துள்ளது.

உரம், மருந்து பொருட்கள் தயாரிப்பதில், அதிகளவில் வேப்பங்-கொட்டை பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதனால், வேப்பங்-கொட்டையின் தேவை அதிகரித்து வருவதுடன், அதற்கு நல்ல விலை கிடைத்து வருகிறது. இந்நிலையில், சில தனியார் உர நிறு-வனங்கள் வேப்பங்கொட்டை கொள்முதல் செய்யாததால், நடப்-பாண்டு வேப்பங்கொட்டை விலை சரிந்துள்ளது.

இது குறித்து, வியாபாரிகள் கூறியதாவது: உரம் தயாரிப்பதில் வேப்பங்கொட்டை அதிகளவில் பயன்படுத்தப் படுவதால், கடந்த சில ஆண்டுகளாக, தனியார் உர நிறுவனங்கள், தங்கள் பிர-திநிதிகளை அனுப்பி வைத்து வேப்பங்கொட்டை கேட்பதுடன், அதற்காக, வியாபாரிகளுக்கு முன்கூட்டியே பணமும் வழங்கி வந்-தனர். இதனால் கடந்தாண்டு, ஒரு கிலோ வேப்பங்கொட்டை, 120 ரூபாய்க்கு விற்பனையானது. இந்நிலையில் கடந்தாண்டு, கொள்முதல் செய்யப்பட்ட வேப்பங்கொட்டை இருப்பு உள்-ளதால், சில தனியார் உர நிறுவனங்கள் நடப்பாண்டு வேப்பங்-கொட்டையை கொள்முதல் செய்யவில்லை. இதனால், நடப்-பாண்டு வேப்பங்கொட்டை வரத்து குறைவாக இருந்த போதிலும், விலை சரிந்து ஒரு கிலோ, 80 ரூபாய்க்கு கொள்-முதல் செய்யப் படுகிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us