/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
ஏரி கால்வாய் ஆக்கிரமிப்பு அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை
/
ஏரி கால்வாய் ஆக்கிரமிப்பு அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை
ஏரி கால்வாய் ஆக்கிரமிப்பு அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை
ஏரி கால்வாய் ஆக்கிரமிப்பு அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை
ADDED : டிச 15, 2024 01:27 AM
அரூர், டிச. 15-
அரூர் அடுத்த லிங்காபுரம் ஏரியில் இருந்து, நர்சனேரிக்கு தண்ணீர் செல்லும் கால்வாயை சிலர் ஆக்கிரமிப்பு செய்துள்ளதுடன், அதனை அடைத்துள்ளனர்.
இதனால், லிங்காபுரம் ஏரியில் இருந்து வெளியேறும் உபரி நீர் செல்ல வழியில்லாமல், அருகில் உள்ள விவசாய நிலங்கள் மற்றும் வீடுகளை சூழ்ந்துள்ளது. எனவே, ஆக்கிரமிப்புகளை அகற்றி, லிங்காபுரம் ஏரியில் இருந்து, நர்சனேரிக்கு தண்ணீர் செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பொதுமக்களும், விவசாயிகளும் கோரிக்கை விடுத்திருந்தனர்.
இது குறித்த செய்தி நமது நாளிதழில் வெளியானது. இந்நிலையில், ஏரிக்கால்வாய் ஆக்கிரமிப்பு அகற்றுவது குறித்து, அரூர் தாலுகா அலுவலகத்தில், நேற்று தாசில்தார் ராதாகிருஷ்ணன் தலைமையில் பேச்சுவார்த்தை நடந்தது. அரூர் டவுன் பஞ்., துணைத் தலைவர் தனபால், ஆர்.ஐ., சத்தியபிரியா, கவுன்சிலர் பெருமாள் மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனர்.