/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
புதிய பாரத எழுத்தறிவு திட்டம் அரூரில் ஆலோசனை கூட்டம்
/
புதிய பாரத எழுத்தறிவு திட்டம் அரூரில் ஆலோசனை கூட்டம்
புதிய பாரத எழுத்தறிவு திட்டம் அரூரில் ஆலோசனை கூட்டம்
புதிய பாரத எழுத்தறிவு திட்டம் அரூரில் ஆலோசனை கூட்டம்
ADDED : ஏப் 29, 2025 01:37 AM
அரூர்,:
தர்மபுரி மாவட்டம், அரூர் ஒன்றியத்தில், புதிய பாரத எழுத்தறிவு திட்டத்தில், 15 வயதுக்கு மேற்பட்ட கல்லாதவர்களுக்கான எழுத்தறிவு திட்டம், 100 மையங்களில் நடந்து வருகிறது.
இதில், 2,000 பேர் கற்று வருகின்றனர். இவர்களுக்கு தன்னார்வலர்கள் அந்தந்த மையங்களில் மற்றும் குடியிருப்புகளில் பயிற்சி அளித்து வருகின்றனர்.
இத்திட்டத்திற்கான ஆலோசனை கூட்டம், நேற்று அரூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடந்தது. ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி மாவட்ட உதவி திட்ட அலுவலர் மஞ்சுளா வரவேற்றார். பள்ளி சாரா மற்றும் வயது வந்தோர் கல்வி இயக்கத்தின் இணை இயக்குனர் பொன்குமார் திட்டத்தின் முக்கியத்துவம் மற்றும் கல்வியின் அவசியம் குறித்து, தன்னார்வலர்கள் மத்தியில் பேசினார்.
கூட்டத்தில், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் மோகனபிரியா, வட்டார கல்வி அலுவலர்கள், வட்டார வளமைய மேற்பார்வையாளர், வட்டார ஒருங்கிணைப்பாளர் மற்றும் ஆசிரியர் பயிற்றுனர்கள் கலந்து
கொண்டனர்.

