/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
ஏரியில் புதிதாக மயானம்: தடுக்க கோரி மக்கள் மனு
/
ஏரியில் புதிதாக மயானம்: தடுக்க கோரி மக்கள் மனு
ADDED : ஜூன் 10, 2025 01:28 AM
தர்மபுரி, காரிமங்கலம் அடுத்த மோட்டுக்கொட்டாய் மற்றும் வண்டிகாரன்கொட்டாய் கிராம மக்கள் முள்ளனுார் ஏரியில் புதிதாக மயானம் உருவாக்குவதை தடுக்கக்கோரி, கலெக்டர் சதீஸ்யிடம் மனு அளித்தனர்.
அதில், அவர்கள் கூறியுள்ளதாவது: காரிமங்கலம் ஒன்றியம் பந்தாரஅள்ளி பஞ்.,க்கு உட்பட்டது முள்ளனுார் ஏரி. இந்த ஏரிக்கு கிருஷ்ணகிரி அணையின் வலதுபுறம் கால்வாய் மூலம், பாசன நீர் வருகிறது. இந்த ஏரியில், நீர்நிலைப்பகுதியில் ஆக்கிரமிப்பு செய்து, கடந்த, 11 மாதத்திற்கு முன் ஒரு சடலத்தையும், கடந்த, 7ல் ஒரு சடலத்தையும் முள்ளனுார் கிராமத்தினர் அடக்கம் செய்து, புதிதாக மயானம் ஏற்படுத்த முயற்சித்து வருகின்றனர். முள்ளனுார் கிராமத்தினர், பூலாப்பட்டி ஆற்றின் கரையோரம் சடலங்களை அடக்கம் செய்யும் மயானம் உள்ளது. ஆனால், அதை தவிர்த்து தற்போது, முள்ளனுார் ஏரியில் புதிதாக மயானம் அமைக்க முயற்சி செய்து வருகின்றனர். இதை தடுத்து நிறுத்த, நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு, அதில் கூறியுள்ளனர்.