நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெரும்பாலை, தர்மபுரி மாவட்டம், பென்னாகரம் தாலுகா, நாகா வதி அணை இலங்கை தமி ழர் மறுவாழ்வு முகாமை சேர்ந்தவர் புவனேஸ்வரி, 28. இவரை கடந்த ஜூன், 2 அன்று அதே பகுதியை சேர்ந்த மணிமாறன் என்பவருக்கு, இரண்டரை பவுன் நகை போட்டு, பெற்றோர் திருமணம் செய்து வைத்த னர். மணிமாறனுக்கு குடிப்பழக்கம் இருந்ததால், தம்பதிக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டது.
மேலும், அடகு வைத்த நகைகளை மீட்டு தரக்கூறி புவனேஸ்வரி கேட்டதால், இருவருக்கும் வாய் தகராறு ஏற்பட்டது. கடந்த, 10 அன்று இரவு, 7:45 மணிக்கு புவனேஸ்வரி தன் உடல் மீது, மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்து தற்கொலைக்கு முயன்றார். அவரை மீட்டு, தர்மபுரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு கடந்த, 17 இரவு, 8:05 மணிக்கு உயிரிழந்தார். பெரும்பாலை போலீசார் வழக்கு பதிந்த நிலையில், தர்மபுரி ஆர்.டி.ஓ., காயத்ரி விசாரணை மேற்கொண்டு வருகிறார்.