/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
ரூ.16.80 லட்சத்தில் புதிய பல்நோக்கு கட்டட பணி
/
ரூ.16.80 லட்சத்தில் புதிய பல்நோக்கு கட்டட பணி
ADDED : நவ 06, 2025 12:50 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பாப்பிரெட்டிப்பட்டி, கடத்துார் ஒன்றியம் கேத்துரெட்டிப்பட்டி ஊராட்சி வேப்பிலைபட்டியில், எம்.எல்.ஏ., தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து, 16.80 லட்சம் மதிப்பில் புதிதாக பல்நோக்கு மைய கட்டடம் கட்டும் பணியை, அ.தி.மு.க., - எம்.எல்.ஏ., கோவிந்தசாமி பூமி பூஜை செய்து பணியை தொடங்கி வைத்தார்.
மேலும், அதே பகுதியில் புதிய சுத்திகரிப்பு நிலையத்தையும் திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர் மதிவாணன், ஒன்றிய துணை செயலாளர் ரவி, கிளை செயலாளர்
கிருபாநிதி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

