/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
கன்டெய்னர் லாரி மோதல் வடமாநில தொழிலாளி பலி
/
கன்டெய்னர் லாரி மோதல் வடமாநில தொழிலாளி பலி
ADDED : நவ 06, 2025 12:51 AM
தொப்பூர், திருவண்ணாமலை மாவட்டம், கீழ்கொடுங்கலுாரை சேர்ந்த டிரைவர் கார்த்திக், 29. இவர் சென்னையில் இருந்து, சேலம் மாவட்டம் மேட்டூருக்கு பாரத் பென்ஸ் கன்டெய்னர் லாரியில் கெமிக்கல் பவுடர் ஏற்றி வந்தார்.
நேற்று காலை, 9:15 மணிக்கு பெங்களுரு-சேலம் தேசிய நெடுஞ்சாலையில், தர்மபுரி மாவட்டம், தொப்பூர் கட்டமேடு அடுத்துள்ள இரட்டை பாலம் அருகே வந்தபோது, கன்டெய்னர் லாரி, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து, தொப்பூர் கணவாய் பகுதியில் பாலம் கட்டுமான பணியில் ஈடுபட்டிருந்த, மத்திய பிரதேச மாநிலத்தை சேர்ந்த தொழிலாளி ஹீமான்சூ, 35, என்பவர் மீது மோதியது. இதில், அவர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியானார்.
அவரது உடலை தொப்பூர் போலீசார் கைப்பற்றி விசாரித்து வருகின்றனர். பாளையம் சுங்கச்சாவடி ஊழியர்கள் மற்றும் போலீசார் விபத்துக்குள்ளான வாகனத்தை அப்புறப்படுத்தி, போக்குவரத்தை சீர் செய்தனர்.

