sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தர்மபுரி

/

செய்திகள் சில வரிகளில்...

/

செய்திகள் சில வரிகளில்...

செய்திகள் சில வரிகளில்...

செய்திகள் சில வரிகளில்...


ADDED : ஜன 07, 2024 10:42 AM

Google News

ADDED : ஜன 07, 2024 10:42 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ரூ.24.52 லட்சத்தில்

தார்ச்சாலைக்கு பூஜை

கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி ஒன்றியம், காருபல்லா கிராமம் முதல் தின்னுார் வரை செல்லும் சாலை மிகவும் சேதமாகி மோசமான நிலையில் இருந்தது. இச்சாலையை புதிதாக அமைத்து தர வேண்டும் என, கிராம மக்கள் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து, கனிமங்களும், குவாரிகளும் திட்டத்தில், 24.52 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டது. இப்பணியை, சூளகிரி ஒன்றியக்குழு தலைவர் லாவண்யா ஹேம்நாத் நேற்று பூஜை செய்து துவக்கி வைத்தார்.

தொடர்ந்து, கிராம மக்களை சந்தித்து குறைகளை கேட்டறிந்து, அவற்றை நிவர்த்தி செய்து கொடுப்பதாக உறுதியளித்தார். பி.டி.ஓ., விமல்ரவிக்குமார், ஒன்றிய கவுன்சிலர்கள் நாகேஷ், புஷ்பா சீனிவாசன், உதவி செயற்பொறியாளர் சவுந்தரராஜன், பஞ்., தலைவர் நரசிம்மன் உட்பட பலர் பங்கேற்றனர்.

விபத்தில் தொழிலாளி பலி

சூளகிரி அருகே, திருமலைக்கோட்டா பகுதியை சேர்ந்தவர் சாதிக், 34, கூலித்தொழிலாளி; இவர் நேற்று முன்தினம் நள்ளிரவு, 2:00 மணிக்கு, யமகா பாசினோ பைக்கில் ஹெல்மெட் அணியாமல், ஓசூர் - கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில், பேரண்டப்பள்ளி பகுதியில் சென்றார். அப்போது, அவ்வழியாக வந்த பொலிரோ பிக்கப் வாகனம், அவர் சென்ற பைக் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த சாதிக், ஓசூர் அரசு மருத்துவமனை செல்லும் வழியில் உயிரிழந்தார். ஹட்கோ போலீசார் விசாரிக்கின்றனர்.

இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட்

கண்டன ஆர்ப்பாட்டம்

ஊத்தங்கரை, பேரூராட்சி திருமண மண்டபம் பகுதியில், இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில், வரும், 10ம் தேதி, காலை, 10:00 மணியளவில், மாவட்ட மாநாடு நடப்பதாக பேனர் வைத்துள்ளனர். அதே தேதியில், பா.ஜ., கட்சி சார்பில் மாநிலத்தலைவர் அண்ணாமலை வருவதால், ஊத்தங்கரை பகுதியில் வைத்த பல்வேறு விளம்பர பேனர்கள் உடனடியாக அகற்ற, ஊத்தங்கரை, டி.எஸ்.பி., பார்த்திபன் கூறியுள்ளார். அதே தேதியில் மாநாடு உள்ளதால், இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சியினர் பேனரை எடுக்க மறுத்தனர். டி.எஸ்.பி., ஆபீஸ் எதிரே மண்டபத்தில் வைக்கப்பட்டுள்ள பேனரை, மர்ம நபர்கள் பிளேடால் கிழித்துள்ளனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி கட்சியின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

ஆம்புலன்ஸ் சேவை

துவக்க விழா

ஊத்தங்கரையில், மனிதநேய மக்கள் கட்சி சார்பில், அனைத்து சமுதாய மக்களும் பயன்பெறும் வகையில் ஆம்புலன்ஸ் சேவை துவக்க விழா நேற்று நடந்தது. விழாவிற்கு, மாவட்ட தலைவர் நுார்முகம்மது தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் வாஹித் பாஷா, ஒன்றிய தலைவர் ரசூல் பாஷா, நகர தலைவர் சதாம், மாவட்ட இளைஞரணி செயலாளர் ரபீக், மாவட்ட துணை செயலாளர் யாசின், நகர செயலாளர் ஆனந்த் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆம்புலன்ஸ் சேவையை, மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா துவக்கி வைத்தார்.

தே.மு.தி.க.,வினர்

அமைதி ஊர்வலம்

காவேரிப்பட்டணத்தில், தே.மு.தி.க., சார்பில், அக்கட்சி நிறுவன தலைவர் விஜயகாந்த் மறைவையொட்டி, அமைதி ஊர்வலம் நடந்தது. மாவட்ட அவைத்தலைவர் சின்னராஜ், செயலாளர் சீனிவாசன் தலைமை வகித்தனர். காவேரிப்பட்டணம் பஸ் ஸ்டாண்டில் துவங்கிய அமைதி பேரணி பாலக்கோடு பிரிவு சாலை வழியாக, மீண்டும் பஸ் ஸ்டாண்டில் நிறைவடைந்தது. ஒன்றிய செயலாளர் வல்லரசு, காளியப்பன், கனகன் மற்றும், 100க்கும் மேற்பட்ட, தே.மு.தி.க.,வினர் கலந்து கொண்டனர்.

பயிர்களை நாசம் செய்த

யானைகள் கூட்டம்

மாரச்சந்திரம் கிராமத்திற்குள் புகுந்த யானைகள் கூட்டம், பயிர்களையும், தண்ணீர் குழாய்களையும் நாசம் செய்தன.

தேன்கனிக்கோட்டை வனச்சரக பகுதியில் ஏராளமான யானைகள் முகாமிட்டுள்ளன. கம்மந்துார் வனப்பகுதியில் இருந்து நேற்று முன்தினம் இரவு வெளியேறிய, 6 யானைகள், மாரச்சந்திரம் கிராமத்திற்குள் புகுந்து, ஒன்றரை ஏக்கர் முட்டைகோஸ், மக்காச்சோளம், ஒன்றரை ஏக்கர் தக்காளி மற்றும் போர்வெல் குழாய்களை சேதப்படுத்தின.

பின், அதிகாலை நேரத்தில் மீண்டும் வனப்ப

குதிக்கு திரும்பின. யானைகளால் தொடர்ந்து விவசாய பயிர்கள் சேதமாகி வருவதால், விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். கர்நாடகா மாநிலத்திற்கு யானைகளை விரட்ட வேண்டும். இல்லா விட்டால் அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்டி, விவசாய நிலங்களுக்கு வராமல் தடுக்க வேண்டும் என, விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சாலை பாதுகாப்பு

விழிப்புணர்வு நிகழ்ச்சி

ஓசூர், இன்ஜினியர் பெருமாள் மணிமேகலை பாலிடெக்னிக் கல்லுாரியில், தனியார் டிரைவிங் ஸ்கூல் மற்றும் காவேரிப்பட்டணம் இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி சார்பில், சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. பி.எம்.சி., டெக் கல்வி நிறுவனங்களின் தலைவர் குமார் தலைமை வகித்து பேசினார்.

இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி காவேரிப்பட்டணம் துணை கிளை செயலாளர் செந்தில்குமார் உட்பட பலர் பங்கேற்றனர். ஏற்பாடுகளை, பி.எம்.சி., டெக் பாலிடெக்னிக் கல்லுாரி யூத் ரெட் கிராஸ் ஒருங்கிணைப்பாளர்

முகமது அப்பாஸ் செய்திருந்தார்.

மாண்டியாவுக்கு விவசாயிகள்

வெளிமாநில பட்டறிவு பயணம்

சூளகிரி, வட்டார வேளாண் துறை அட்மா திட்டம் சார்பில், கர்நாடகா மாநிலம், மாண்டியாவில் உள்ள வேளாண் மண்டல ஆராய்ச்சி நிலையத்திற்கு, 20 விவசாயிகள் பட்டறிவு பயணமாக அழைத்து செல்லப்பட்டனர். 832 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த, வேளாண் மண்டல ஆராய்ச்சி மையத்தில், 100 ஏக்கரில் கரும்பு, சாகுபடி செய்யப்பட்டுள்ளதாக, ஆராய்ச்சி நிலைய இணை பேராசிரியர் நந்திஷ் விவசாயிகளுக்கு விளக்கினார். இணை பேராசிரியர் யூசுப் அப்பாஸ், உதவி நிர்வாக அலுவலர் ராஜசேகரா ஆகியோர், விவசாயிகளுக்கு பல்வேறு ஆலோசனைகளை வழங்கினர். மண்புழு உரம் உற்பத்தி செய்யும் முறைகள் குறித்தும், வெர்மிவாஷ் தயாரிக்கும் முறைகள் பற்றியும், விவசாயிகளுக்கு விளக்கி கூறப்பட்டது. ஏற்பாடுகளை, அட்மா திட்ட உதவி தொழில்நுட்ப மேலாளர்கள் முகம்மது ரபி,

பழனிசாமி ஆகியோர் செய்திருந்தனர்.

பணிக்கு வர மறுத்தவர்களை

தாக்கிய இருவருக்கு காப்பு

கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் அடுத்த சிந்தகம்பள்ளியை சேர்ந்தவர் வடிவேல், 38. அதேபகுதியை சேர்ந்தவர் மதன்குமார், 40. பொக்லைன் ஆப்பரேட்டர்கள். கடந்த, 4ல் மாலை இருவரும் சிந்தகம்பள்ளியில் பொக்லைன் மூலம் குழி தோண்டி, பைப்லைன் அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு வந்த சின்ன மட்டாரப்பள்ளியை சேர்ந்த அப்துல் ரகுமான், 33, என்பவர், தன் பணிக்காக பொக்லைனுடன் வருமாறு அவர்களை அழைத்துள்ளார். இதற்கு வடிவேல் மறுப்பு தெரிவித்துள்ளார். இதனால் இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து வடிவேல், மதன்குமாரை அப்துல் ரகுமான் தாக்கியுள்ளார். படுகாயமடைந்த இருவரும் பர்கூர் அரசு மருத்துவ

மனையில் சிகிச்சை பெற்றனர்.

அதேபோல வரட்டனப்பள்ளி ஆர்.ஐ., அலுவலகம் அருகில், மண் கடத்தலில் ஈடுபட்டதாக பாலேப்பள்ளி வி.ஏ.ஓ., ரோஷினி அளித்த புகார்படியும், தங்களை தாக்கியதாக வடிவேல் அளித்த புகார்படியும் கந்திக்குப்பம் போலீசார், அப்துல் ரகுமானை கைது செய்தனர்.

மலைவாழ் மக்கள் சங்கம்

கண்டன ஆர்ப்பாட்டம்

அஞ்செட்டி தாலுகா, உரிகம் அடுத்த ஈரண்ணதொட்டி மலைகிராம பழங்குடியின பெண்களை மானபங்கம் செய்தும், ஷூ காலால் எட்டி உதைத்த வனத்துறையினரை கண்டித்தும், பாதிக்கப்பட்ட பழங்குடியின மக்கள் மீது போடப்பட்ட வழக்குகளை உடனடியாக ரத்து செய்ய வலியுறுத்தியும், அஞ்செட்டி பஸ் ஸ்டாண்டில், தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கம் சார்பில், நேற்று

கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

மாவட்ட செயலாளர் குமார

வடிவேல் தலைமை வகித்தார். மாநில தலைவர் டில்லிபாபு, துணைத்தலைவர் சண்முகம் பேசினர். பழங்குடியின பெண்களை மானபங்கம் செய்த வனத்துறையினர் மீது வழக்குப்பதிந்து, உடனடியாக கைது செய்து, தண்டனை வழங்க வலியுறுத்தி, கோஷங்களை எழுப்பினர். தமிழ்நாடு விவசாயிகள் சங்க, மாவட்ட செயலாளர் பிரகாஷ், தலைவர் முருகேசன், மா.கம்யூ., மாவட்ட செயற்குழு உறுப்பினர் சேகர் உட்பட பலர் பங்கேற்றனர்.

தொப்பூர் கணவாயில் லாரி கவிழ்ந்து விபத்து

தொப்பூர் கணவாய் பகுதியில், ரவை லோடுடன் வந்த லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், டிரைவர் உட்பட, 2 பேர் படுகாயம் அடைந்தனர்.

புனேவில் இருந்து மதுரைக்கு ரவை பாரம் ஏற்றிய லாரி ஒன்று, தர்மபுரி மாவட்டம் தொப்பூர் கணவாய் வழியாக நேற்றிரவு, 7:30 மணிக்கு வந்தது. அப்போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி, சாலையோர பள்ளத்தில், கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில், லாரி டிரைவர் உட்பட, 2 பேர்

படுகாயமடைந்தனர்.

விபத்து குறித்து தகவலறிந்த போலீசார் மற்றும் பாளையம் சுங்கச்சாவடி ரோந்து குழுவினர், விபத்தில் சிக்கி தவித்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக, சேலம் தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து, தொப்பூர் போலீசார் விசாரிக்கின்றனர்.

பொறியியல் தேர்வில்

920 பேர் 'ஆப்சென்ட்'

தர்மபுரி மாவட்டத்தில் நடந்த ஒருங்கிணைந்த பொறியியல் தேர்வில், 920 பேர் ஆப்சென்ட் ஆகினர்.

தமிழ்நாடு, அரசு பணியாளர் தேர்வாணையம் சார்பில், ஒருங்கிணைந்த பொறியியல் பணிகள் அடங்கிய பதவிகளுக்கான எழுத்து தேர்வு, தர்மபுரி அரசு கலைக்கல்லுாரி உட்பட, 4 மையங்களில் காலை மற்றும் பிற்பகல் என, இருவேளைகளில் நடந்தது. காலை தேர்வுக்கு விண்ணப்பித்திருந்த, 1,382 பேரில், 926 பேர் மட்டும் தேர்வில் பங்கேற்ற நிலையில், 456 பேர் தேர்வெழுத வரவில்லை.

பிற்பகல் நடந்த தேர்வில் தேர்வு எழுத விண்ணப்பித்திருந்த, 1,435, பேரில், 971 பேர் தேர்வு எழுதினர். 464 பேர் ஆப்சென்ட் ஆகினர். அதன்படி மாவட்டத்தில் நேற்று நடந்த தேர்வில் மொத்தம், 920 பேர் ஆப்சென்ட் ஆனார்கள்.

பள்ளி மேலாண்மை குழு கூட்டம்

அரூர் அடுத்த ஜம்மணஅள்ளி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில், பள்ளி மேலாண்மை குழு கூட்டம் நடந்தது. இதில், பள்ளியில் மின் பழுது சீரமைத்தல், மாணவர்களின் சுகாதாரம், அடிப்படை வசதிகள் குறித்து விவாதிக்கப்பட்டது. மேலும். டேமின் மூலம் பெறப்பட்ட, 2.60 லட்சம் ரூபாயை, நம் ஊர் நம் பள்ளி திட்டத்தில், செலவு செய்து பள்ளியின் கட்டமைப்பை மேம்படுத்துவது குறித்து விவாதிக்கப்பட்டது.

கூட்டத்தில், உதவி திட்ட அலுவலர் அருள்முருகன், பள்ளி மேலாண்மை குழு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சீனிவாசன், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சுரேஷ், பஞ்., தலைவர் சிவராஜ், தலைமையாசிரியை புஷ்பவள்ளி மற்றும் ஆசிரியர்கள், பள்ளி மேலாண்மை குழு தலைவர், உறுப்பினர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

பொம்மிடி பஸ் ஸ்டாண்டை பராமரிக்க உத்தரவு

பாப்பிரெட்டிபட்டி அடுத்த பொம்மிடி பஸ் ஸ்டாண்டிற்கு வருடாந்திர உரிமம் புதுப்பித்து வழங்குவது தொடர்பாக அரூர் ஆர்.டி.ஓ., வில்சன் ராஜசேகர் ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது, பஸ் ஸ்டாண்ட் வளாகம், கழிவறைகள், மாற்றுத்திறனாளிகள் கழிவறை, பாலுாட்டும் அறை, ஆகியவைகளை சுகாதாரமாக வைக்க வேண்டும். மின்விளக்குகள் முறையாக பராமரிக்க வேண்டும் என, பேரூராட்சி நிர்வாகத்திற்கு உத்தரவிட்டார். இந்த ஆய்வின்போது தாசில்தார் வள்ளி, ஆர்.ஐ., விமல் உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனர்.

குழந்தை திருமணம் தடுப்பு

விழிப்புணர்வு பேரணி

நல்லம்பள்ளி அருகே, நாகர் கூடலில் குழந்தை திருமணம் தடுப்பு குறித்த, விழிப்புணர்வு பேரணியை பஞ்., தலைவர் குமார் கொடியசைத்து துவக்கி வைத்தார்.

சமூக நலன், மகளிர் உரிமைத்துறை மற்றும் தனியார் கல்லுாரி இணைந்து, நாகர்கூடல் பஞ்.,தில் குழந்தை திருமணம் தடுப்பு குறித்த, விழிப்புணர்வு பேரணி நேற்று நடந்தது. நாகர்கூடல் பஞ்., அலுவலகம் முன் துவங்கி, கழனிகாட்டூர் வரை சென்ற இப்

பேரணி மூலம், பெண் குழந்தைகளை காப்போம், பெண் குழந்தைகளை கற்பிப்போம் மற்றும் குழந்தை திருமணத்தை தடுப்பது, பெண்களுக்கான எதிரான குற்றச்சம்பவங்களை தடுப்பது பற்றி அப்பகுதி மக்களிடையே, கல்லுாரி மாணவியர் விழிப்புணர்வை ஏற்படுத்தினர். நிகழ்ச்சியில், மாவட்ட சமூக நல அலுவலர் பவித்ரா, உதவி பேராசிரியர் நஞ்சுண்டன் மற்றும் நாட்டு நலப்பணி திட்ட மாணவியர், பொதுமக்கள் பங்கேற்றனர்.

இறந்த போலீஸ்காரரின்

குடும்பத்திற்கு நிதியுதவி

தர்மபுரி மாவட்டத்தில், உடல் நலக்குறைவால் இறந்த போலீஸ்காரரின் குடும்பத்தாருக்கு, உடன் பணிபுரிந்த போலீசார், எஸ்.பி., மூலமாக உதவித்தொகை வழங்கினர்.

கடந்த மாதம், டிச., 17 ல் ஆயுதப்படை பிரிவில் பணி

புரிந்த எஸ்.ஐ., தங்கராஜ் உடல்நல குறைவால் இறந்தார். தர்மபுரி மாவட்ட போலீசார் சார்பாக, அவரின் குடும்பத்தினருக்கு அவருடன் பணியில் சேர்ந்த, 1994 பேஜ் நண்பர்கள் சார்பாக உதவித்தொகையை, தர்மபுரி மாவட்ட

எஸ்.பி., ஸ்டீபன் ஜேசுபாதம் மூலம், இறந்த எஸ்.ஐ., தங்கராஜ் மனைவி கவிபிரியா வசம், 3.75 லட்சம் ரூபாய் காசோலையை வழங்கினர். இதில், அவருடைய மகன் அஜய் மற்றும் அவருடன் பணிபுரிந்த எஸ்.எஸ்.ஐ., கண்ணன், காவேரி, சலீம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

புகையிலை விற்ற

கடைகளுக்கு அபராதம்

மாரண்டஹள்ளி பகுதிகளில், அரசு தடை செய்த புகையிலை பொருட்கள் விற்ற கடைகளுக்கு, அபராதம் வித்தும் மற்றும் 'சீல்' வைத்தும் அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டனர்.

தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு பகுதிகளிலுள்ள பல்வேறு கடைகளில், மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை மற்றும் காவல்துறை அதிகாரிகள் நேற்று ஆய்வு மேற்கொண்டனர். இதில், தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்ற, ஐந்து கடைகளுக்கு அவர்கள், 'சீல்' வைத்தனர். மேலும், ஐந்து கடைகளுக்கும் தலா, 5,000 ரூபாய்

அபராதம் விதிக்கப்பட்டது.

மேற்படி கடைகளுக்கு, மாவட்ட நியமன அலுவலர் பானுசுஜாதா உடனடி அபராதம் மற்றும் கடை செயல்பட தடை விதித்து, நோட்டீஸ் வழங்கி, கடையை மூட நடவடிக்கை மேற்கொண்டார். காரிமங்கலம் மற்றும் பாலக்கோடு ஒன்றிய உணவு பாதுகாப்பு அலுவலர் நந்தகோபால் மற்றும் மாரண்டஹள்ளி காவல் நிலைய சிறப்பு நிலை காவலர்கள் வினு மற்றும் சந்திரன் உள்ளிட்டோர் ஆய்வு பணியில் ஈடுபட்டனர்.

எச்.ஈச்சம்பாடியில் பஸ்கள்

நின்று செல்ல கோரிக்கை

அரூர் - ஊத்தங்கரை சாலையில், எச்.ஈச்சம்பாடி உள்ளது. இதை சுற்றியுள்ள கீழ்மொரப்பூர், வேப்பநத்தம், கணபதிபட்டி உள்ளிட்ட, 20க்கும் மேற்பட்ட கிராம மக்கள், வேலைக்கு செல்லும் கூலித்தொழிலாளர்கள் மற்றும் பள்ளி, கல்லுாரி மாணவர்கள் தினமும் எச்.ஈச்சம்பாடி பஸ் ஸ்டாப்பிற்கு வந்து அங்கிருந்து அரூர், சேலம், ஊத்தங்கரை உள்ளிட்ட இடங்களுக்கு சென்று வருகின்றனர்.

இந்நிலையில், ஈச்சம்பாடியில் அரசு பஸ்கள் நின்று செல்லாததால், பொதுமக்கள் சிரமப்படுகின்றனர். எனவே, எச்.ஈச்சம்பாடியில் அனைத்து அரசு பஸ்களும் நின்று செல்ல போக்குவரத்துதுறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இரு இடங்களில்

பைக் திருட்டு

தர்மபுரி, விவேகானந்தர் டவுன் ஹால் பகுதியை சேர்ந்தவர் பிரகாஷ், 48; இவர் கடந்த, 27 அன்று அவருடைய டி.வி.எஸ்., எக்ஸ்.எல்., 100 மொபட்டை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்று திரும்பினார். அப்போது அவரது மொபட்டை காணவில்லை. தர்மபுரி டவுன் போலீசில் புகார் அளித்தார்.

அதேபோல், தர்மபுரி ஏ.எஸ்.டி.சி., நகரை சேர்ந்த அருள்

மொழியாள், 38 இவர், அரியாகுளம் அரசு மேல்நிலைப் பள்ளி ஆசிரியை. கடந்த, 30 அன்று அவருடைய ஹோண்டா டியோ ஸ்கூட்டரை வீட்டின் முன் நிறுத்திவிட்டு சென்றார். திரும்பி வந்து பார்த்தபோது ஸ்கூட்டரை காணவில்லை. இது குறித்து அருள்மொழியாள் புகார்படி, தர்மபுரி டவுன் போலீசார் விசாரிக்கின்றனர்.

6 கிராமத்தை சேர்ந்த 2,500 பேர்

திருப்பதிக்கு ஆன்மிக பயணம்

பாலக்கோடு அருகே, பேளாரஹள்ளி பஞ்., ல் 6 கிராமங்களை சேர்ந்த, 2,500 பேர், ஒன்றாக திருப்பதிக்கு ஆன்மிக பயணம் சென்றனர்.

தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு அருகே பேளாரஹள்ளி பஞ்.,ல் உள்ள, கொட்டாப்பள்ளம், கருப்பாயிகொட்டாய், பூர்காலன்கொட்டாய், குண்டன்கொட்டாய், மேச்சேரிகொட்டாய், தர்மகர்த்தா கொட்டாய் உள்ளிட்ட, 6 கிராம மக்கள், 5 ஆண்டுக்கு ஒரு முறை ஒன்றாக திருப்பதிக்கு ஆன்மிக பயணம் செல்வது வழக்கம். அதன்படி நேற்று, வயதானவர்கள், பால் உற்பத்தி விவசாயிகளை தவிர்த்து அனைவரும் ஒன்றாக, 25 பஸ்கள், வேன், கார்கள் என மொத்தம், 50க்கும் மேற்பட்ட வாகனங்களில், 2,500 பேர், தாங்கள் சேர்த்து வைத்துள்ள உண்டியல் காணிக்கைகளை எடுத்துக் கொண்டு, திருப்பதிக்கு புறப்பட்டுச் சென்றனர்.






      Dinamalar
      Follow us