/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
பள்ளி மாணவர்களுக்கு நிலவேம்பு கசாயம்
/
பள்ளி மாணவர்களுக்கு நிலவேம்பு கசாயம்
ADDED : டிச 08, 2024 01:36 AM
பாப்பிரெட்டிப்பட்டி, டிச. 8---
பொ.மல்லாபுரம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டது.
மாணவர்களிடையே நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தவும், காய்ச்சலை தடுக்கவும், பொ. மல்லாபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில், பள்ளி மாணவர்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கும் நிகழ்ச்சி, தலைமை ஆசிரியர் பாலமுருகன் தலைமையில் நடந்தது. பி.டி.ஏ., தலைவர் கவுதமன், பொருளாளர் கோகுல்நாத், கல்வியாளர் நேதாஜி, எஸ்.எம்.சி., தலைவர் மகேஸ்வரி ஆகியோர் முன்னிலை வகித்தனர். உதவி தலைமை ஆசிரியர், என்.எஸ்.எஸ்., திட்ட அலுவலர் தமிழ்தென்றல் வரவேற்றார். சித்த மருத்துவர் தினகரன் மாணவர்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கி, அதன் பயன்கள் குறித்து பேசினார். இதில் ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர். உடற்கல்வி ஆசிரியர் சேகர் நன்றி கூறினார்.