தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/தர்மபுரி/நெகிழி இல்லா வனம் துாய்மை பணி

நெகிழி இல்லா வனம் துாய்மை பணி

நெகிழி இல்லா வனம் துாய்மை பணி


UPDATED : அக் 04, 2026 05:36 AM

ADDED : அக் 04, 2026 03:40 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 04, 2026 05:36 AM ADDED : அக் 04, 2026 03:40 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பாலக்கோடு: பாலக்கோடு வனச்சரகத்தில், வன உயிரின வார விழாவை முன்-னிட்டு, பிளாஸ்டிக் பொருட்கள் அகற்றம் மற்றும் துாய்மை பணி நடந்தது.

தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு வனச்சரகத்தின் சார்பில், வன உயிரின வாரா விழாவை முன்னிட்டு, 'நெகிழி இல்லா வனம்' என்ற தலைப்பில், வனப்பகுதியில் பிளாஸ்டிக் பொருட்கள் மற்றும் குப்பை அகற்றும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. பாலக்கோடு வனச்சரக அலுவலர் கார்த்திகேயன் தலைமையில், எர்ரனஹள்ளி காப்புகாடு மற்றும் கணவனஹள்ளி காப்புக்காடு பகுதிகளில் துாய்மை பணி நடந்தது. இதில், 250 கிலோ பிளாஸ்டிக் குப்பை அகற்றப்பட்டு, மறுசுழற்சிக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து, ஐந்தாவது மைல், பூமரத்துார் கிராமங்களில் பிளாஸ்டிக் பொருட்-களை தவிர்ப்பது குறித்து, பொதுமக்களுக்கு துண்டு பிரசுரம் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.இதில், வனவர்கள் முனுசாமி, சின்னசாமி வனக்காப்பாளர்கள், வனப் பணியாளர்கள், பாலக்கோடு பகுதியை சேர்ந்த தன்னார்வ-லர்கள், பள்ளி மாணவர்கள் பலர் கலந்து கொண்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us