/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
வங்கியின் போலி ஏ.டி.எம்., கார்டு வைத்திருந்த வட மாநில நபர் கைது
/
வங்கியின் போலி ஏ.டி.எம்., கார்டு வைத்திருந்த வட மாநில நபர் கைது
வங்கியின் போலி ஏ.டி.எம்., கார்டு வைத்திருந்த வட மாநில நபர் கைது
வங்கியின் போலி ஏ.டி.எம்., கார்டு வைத்திருந்த வட மாநில நபர் கைது
ADDED : அக் 03, 2025 01:41 AM
தர்மபுரி, தர்மபுரி அருகே, பிடமனேரி பகுதியை சேர்ந்த ஆட்டோ டிரைவர் இப்ராஹிம், 25. இவர், நேற்று முன்தினம் மாலை, 5:00 மணிக்கு, தர்மபுரி நேதாஜி பைபாஸ் சாலையிலுள்ள, எஸ்.பி.ஐ., வங்கி ஏ.டி.எம்.,மில் பணம் எடுக்க சென்றார். இரு முறை முயற்சி செய்தும் பணம் வரவில்லை. அப்போது, அருகிலிருந்த நபர், தான் ஏ.டி.எம்.,ல் பணம் எடுத்து கொடுப்பதாக கூறியுள்ளார்.
இதை நம்பிய இப்ராஹிம், அந்த நபரிடம் தன்னுடைய ஏ.டிஎம்., கார்டை கொடுத்தார். அந்த நபர் முயற்சி செய்தும் பணம் வரவில்லை என, கூறிவிட்டு ஏ.டி.எம்., கார்டை திருப்பி கொடுத்தபோது, அது இப்ராஹிம் கார்டு இல்லை என தெரிந்தது. இதையடுத்து, சந்தேகத்திற்கிடமான அந்த நபரை பிடித்து, அவர் வைத்திருந்த பையை பார்த்தபோது, அதில் பல வங்கிகளின் ஏ.டி.எம்., கார்டுகள் இருந்தது தெரியவந்தது.
இது குறித்து, இப்ராகிம் புகார் படி, சம்பந்தப்பட்ட நபரை, போலீசார் பிடித்து, விசாரித்தனர். இதில், மஹாராஷ்டிரா மாநிலம், பக்கவாடி பகுதியை சேர்ந்த சாம்பாஜி கோவிந்த ஜாதவ், 40, என்பதும் இவர் ஏ.டி.எம்., சென்டர்களில் நின்று கொண்டு பணம் எடுக்க வரும் நபர்களிடம் உதவி செய்வது போல் நடித்து ஏ.டி.எம்., கார்டுகளை எடுத்து சென்றது மற்றும் போலியான ஏ.டி.எம்., கார்டுகளை வைத்திருந்தது விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து, சாம்பாஜி கோவிந்த ஜாதவை, தர்மபுரி டவுன் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.