/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
என்.எஸ்.எஸ்., சார்பில் கால்நடை சிறப்பு முகாம்
/
என்.எஸ்.எஸ்., சார்பில் கால்நடை சிறப்பு முகாம்
ADDED : அக் 03, 2025 01:43 AM
பாப்பிரெட்டிப்பட்டி, பொ.மல்லாபுரம் மற்றும் நத்தமேடு அரசு மேல்நிலைப்பள்ளி என்.எஸ்.எஸ்., மாணவர்கள் சார்பில் நத்தமேடு கிராமத்தில் கால்நடை மருத்துவ முகாம் நடந்தது. தலைமையாசிரியர்கள் கோவிந்தராஜ், பாலமுருகன் ஆகியோர் தலைமை வகித்தனர். திட்ட அலுவலர் உதவி தலைமை ஆசிரியர் தமிழ் தென்றல் வரவேற்றார்.
முகாமில் மாணவர்களுக்கு, பல்வேறு ஆளுமை திறன் வளர்ச்சி குறித்து கருத்தரங்குகள் நடந்தது. கெட்டூர் கிராமத்தில் 300க்கும் மேற்பட்ட மரக்கன்றுகளை மக்களுக்கு வீடு வீடாக மாணவர்கள் வழங்கினர். தொடர்ந்து மழை நீர் சேகரிப்பு, போதை பொருள் ஒழிப்பு, பிளாஸ்டிக் ஒழிப்பு, டெங்கு, குழந்தை தொழிலாளர் ஒழிப்பு குறித்து கடந்த ஒரு வாரங்களாக விழிப்புணர்வு பேரணி நடந்தது. உயர்கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி நடந்தது.
நிறைவு நாளான நேற்று, கால்நடை மருத்துவ முகாம் நடந்தது கால்நடை உதவி மருத்துவர் குந்தவை மாடுகளுக்கு சிகிச்சை அளித்தார். அப்போது நத்தமேடு கிராமத்தில், 100க்கும் மேற்பட்டோர் தங்கள் வீடுகளில் வழங்கப்பட்டுள்ள மாடு, ஆடு உள்ளிட்ட கால்நடைகளுக்கு காணை நோய், குடற்புழு நீக்கம் உட்பட பல்வேறு நோய்களுக்கு டாக்டர் சிகிச்சை அளித்தனர். சினை பரிசோதனை செய்தனர்.
நிகழ்ச்சியில், தலைமை ஆசிரியர்கள் நாகேந்திரன், சவுந்தர்ராஜன், பட்டதாரி ஆசிரியர் கார்த்திக் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். நத்தமேடு பள்ளியின் திட்ட அலுவலர் செந்தில் நன்றி கூறினார்.