/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
சத்துணவு ஊழியர்கள்தர்ணா போராட்டம்
/
சத்துணவு ஊழியர்கள்தர்ணா போராட்டம்
ADDED : ஏப் 18, 2025 01:29 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தர்மபுரி:சத்துணவு ஊழியர்களுக்கு காலமுறை ஊதியம் கேட்டு, தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தின் சார்பில், தர்மபுரி கலெக்டர் அலுவலகம் அருகே, தர்ணா போராட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் தேவகி தலைமை வகித்தார். மாநில செயலாளர் மகேஸ்வரி, மாவட்ட செயலாளர் அனுசுயா உட்பட பலர் கோரிக்கைகளை விளக்கி பேசினர்.
இதில், காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும். தொகுப்பூதியத்தில் நியமனம் செய்யும் அரசாணையை ரத்து செய்ய வேண்டும். குடும்ப பாதுகாப்புடன் கூடிய ஓய்வூதியம், 9,000 ரூபாய் வழங்க வேண்டும். 63,000க்கும் மேற்பட்ட காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும், என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினர்.