ADDED : ஜன 21, 2026 10:53 AM
தர்மபுரி: தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தினர், 5 அம்ச கோரிக்கை-களை நிறைவேற்ற வலியுறுத்தி, தர்மபுரி கலெக்டர் அலுவலகம் அருகே, நேற்று மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்ட தலைவர் தேவகி தலைமை வகித்தார். செயலாளர் மகேஸ்வரி, பொருளாளர் வளர்மதி, மாநில செயற்குழு உறுப்பினர் ஜெயா உட்பட பலர் கோரிக்கைகள் குறித்து விளக்கி பேசினர்.
இதில், சிறப்பு காலமுறை ஊதியத்தில் பணியாற்றும் அனைத்து வகையான பணியாளர்களுக்கும், நிரந்தர காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். காலி பணியிடங்களை, நிரந்தர அரசு பணியி-டங்களாக நிரப்ப வேண்டும். குறைந்தபட்ச ஓய்வூதியமாக, 7,850 ரூபாய் வழங்க வேண்டும். சத்துணவு அமைப்பாளர்களுக்கு, 10 லட்சம் ரூபாய், உதவியாளர்களுக்கு 5 லட்சம் ரூபாய் பணிக்-கொடை நிதியாக வழங்க வேண்டும். குடும்ப ஓய்வூதியமாக குறைந்த பட்சம், 9,000 ரூபாய் வழங்க வேண்டும், என்பன உள்-ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, சேலம் - தர்மபுரி நெடுஞ்சா-லையில் மறியலில் ஈடுபட்ட, 188 பேரை, போலீசாரை கைது செய்து, மாலையில் விடுவித்தனர்.

