ADDED : ஆக 10, 2025 01:19 AM
சத்தியமங்கலம், சத்தியமங்கலம் தாலுகா, சிக்கரசம்பாளையம் பஞ்., புதுவடவள்ளி, திரு நெஸ்ட் உயர்நிலைப்பள்ளியில், நலம் காக்கும் ஸ்டாலின் திட்ட மருத்துவ முகாம் நடந்தது.
நலத்திட்ட உதவிகளை கலெக்டர் கந்தசாமி வழங்கினார். முகாமில் மருத்துவ காப்பீடு திட்டத்தில் பதிவு செய்தல், மாற்றுத்திறனாளிகளுக்கான சான்றிதழ், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டத்தில் ஊட்டச்சத்து, விழிப்புணர்வு வழங்குதல் போன்றவைகளுக்கு தனி ஏற்பாடு செய்திருந்தனர்.
முகாமில் பங்கேற்ற மூன்று கர்ப்பிணிகளுக்கு ஊட்டச்சத்து பெட்டகம், மூன்று மகப்பேறு சஞ்சீவி பெட்டகம், மூன்று மக்களை தேடி மருத்துவம் திட்டத்தில் பெட்டகம் போன்றவற்றை கலெக்டர் வழங்கினார். கோபி சப்-கலெக்டர் சிவானந்தம், நகராட்சி தலைவர் ஜானகி, மாவட்ட சுகாதார அலுவலர் அருணா, மருத்துவ கல்லுாரி முதல்வர் ரவிகுமார் உட்பட பலர் பங்கேற்றனர்.

