/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
மொபைல் போனில் மூழ்கிய அதிகாரிகள் கிராம சபையில் மக்கள் முகம் சுளிப்பு

ADDED : ஆக 16, 2025 01:38 AM
பாலக்கோடு,
சுதந்திர தினத்தையொட்டி, நேற்று தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு யூனியனுக்குட்பட்ட பி.செட்டிஅள்ளி பஞ்.,ல் கிராமசபை கூட்டம் நடந்தது. ஊரக வளர்ச்சித்துறை அதிகாரி விக்னேஸ்வரி தலைமை வகித்தார். மேலும், ஊரக வளர்ச்சித்துறை, உணவு மற்றும் குடிமைப்பணி, பாதுகாப்புத்துறை, பள்ளிக்கல்வித்துறை ஆகிய துறைகளை சேர்ந்த அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
இந்நிலையில், ஊரக வளர்ச்சித்துறை அதிகாரி விக்னேஸ்வரி, பொதுமக்களிடையே மைக்கில் பேசிக்கொண்டிருந்தார். அப்போது, பள்ளிக்கல்வித்துறை சார்பில் கலந்துகொண்ட அதிகாரிகள் மூவர், தங்களது மொபைல் போனில் பேஸ்புக், வாட்ஸாப் பார்த்தபடி இருந்தனர்.
கிராம சபை கூட்டத்திற்கு சென்றால், தங்களது பகுதியில் உள்ள குறைகளுக்கு தீர்வு கிடைக்கும் என்ற எண்ணம் பொதுமக்களிடையே உள்ளது.
ஆனால், இதுபோன்ற செயல்களால், பொதுமக்கள் முகம் சுளிக்கும் நிலைக்கு
தள்ளப்பட்டனர். இதற்கிடையே, ஜோதிஅள்ளி கிராமத்தை சேர்ந்த நபர்
ஒருவர், 'பகுதி நேர ரேஷன் கடையை முழு நேரமாக இயக்கக்கோரி பலமுறை மனு கொடுத்தும், எந்த நடவடிக்கையும், எடுக்கவில்லை' என, அதிகாரிகளிடையே வாக்குவாதத்தில் ஈடுபட்டு பாதியிலேயே எழுந்து
சென்றார்.