/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
கோவிலில் வகுப்பு நடக்கும் பள்ளியில் அதிகாரிகள் ஆய்வு
/
கோவிலில் வகுப்பு நடக்கும் பள்ளியில் அதிகாரிகள் ஆய்வு
கோவிலில் வகுப்பு நடக்கும் பள்ளியில் அதிகாரிகள் ஆய்வு
கோவிலில் வகுப்பு நடக்கும் பள்ளியில் அதிகாரிகள் ஆய்வு
ADDED : நவ 19, 2025 06:25 AM
தர்மபுரி: தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு அடுத்துள்ள பி.செட்டிஹள்ளி பஞ்.,க்குட்பட்ட ஜோதிஹள்ளி கிராமத்தில், ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, அரசு உயர்நிலை பள்ளிக்கு போதுமான வகுப்பறைகள் இல்லை.
பள்ளி எதிரில் உள்ள மாரியம்மன் கோவிலில் வகுப்பு நடத்தப்பட்டு வருகிறது. அதேபோல், உயர்நிலைப் பள்ளி மாணவர்கள், வகுப்பறை முன்புறமுள்ள வராண்டா மற்றும் தெருவில் மேஜைகள் போட்டு படித்து வருகின்றனர்.
இது குறித்து நம் நாளிதழில் செய்தி வெளியானது. இதன் எதிரொலியாக மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஜோதிசந்திரா, மாவட்ட தொடக்க கல்வி அலுவலர்கள் திருமுருகன், தென்றல் மற்றும் பாலக்கோடு பி.இ.ஓ., ஜெகன் ஆகியோர் நேற்று ஆய்வு செய்தனர்.
சி.இ.ஓ., ஜோதிசந்திரா கூறுகையில், ''ஜோதிஹள்ளி அரசு பள்ளி, உயர்நிலை பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டபோது, ஆறு வகுப்பறை கட்டடங்கள் இருந்தன. அதில், 2 வகுப்பறை சேதமடைந்ததால், பாதுகாப்பு கருதி இடிக்கப்பட்டது.
''மீண்டும் அதே இடத்தில், வகுப்பறை கட்ட கடந்தாண்டு டெண்டர் விடப்பட்ட நிலையில், ஒப்பந்ததாரர்கள் போட்டி காரணமாக, பணி தொடங்க விடாமல் தடுத்துள்ளனர். விரைவில் புதிய வகுப்பறை கட்டப்படும்,'' என்றார்.

