/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
ரயில்வே சுரங்க பாதை அமைக்க இடம் தேர்வுக்கு அதிகாரிகள் ஆய்வு
/
ரயில்வே சுரங்க பாதை அமைக்க இடம் தேர்வுக்கு அதிகாரிகள் ஆய்வு
ரயில்வே சுரங்க பாதை அமைக்க இடம் தேர்வுக்கு அதிகாரிகள் ஆய்வு
ரயில்வே சுரங்க பாதை அமைக்க இடம் தேர்வுக்கு அதிகாரிகள் ஆய்வு
ADDED : டிச 31, 2024 07:04 AM
பாப்பிரெட்டிப்பட்டி: கடத்துார் --அரூர் சாலையில், புட்டிரெட்டிப்பட்டி ரயில்வே ஸ்டேஷன் அமைந்துள்ளது. இந்த ரயில்வே ஸ்டேஷன் வழியாக, தினமும், 50 க்கும் மேற்பட்ட பயணிகள் எக்ஸ்பிரஸ், கூட்ஸ் ரயில்கள் கோவை-- சென்னை என, இரு மார்க்கத்தில் செல்கிறது.
அவ்வாறு தொடர்ந்து செல்லும் போது, ரயில்வே கேட் மூடப்படுகிறது. இந்த ரயில்வே கேட் மூடப்படுவதால் வேப்பிலைபட்டி, கேத்துரெட்டிப்பட்டி, பில்பருத்தி, தாளநத்தம், குருபரஹள்ளி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் இருந்து கடத்தூர், தர்மபுரி உள்ளிட்ட பிற நகரங்களுக்கு பள்ளி, கல்லூரி செல்லும் மாணவர்கள், மருத்துவமனைக்கு செல்லும் நோயாளிகள், ஆம்புலன்ஸ் வாகனங்கள், ரயில்வே கேட் மூடப்படுவதால் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது.
இதற்கு மாற்றாக ரயில்வே மேம்பாலம் அல்லது சுரங்கப்பாதை அமைக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். இதையடுத்து நேற்று சேலம் ரயில்வே உதவி கோட்ட பொறியாளர் சிரஞ்சீவி, பகுதி கோட்ட பொறியாளர் ஜவஹர், இருப்பு பாதை ஆய்வாளர் கண்ணன், அரூர் ஆர்.டி.ஓ., சின்னுசாமி, பாப்பிரெட்டிப்பட்டி நெடுஞ்சாலை உதவி கோட்ட பொறியாளர் சண்முகம், தாசில்தார் வள்ளி உள்ளிட்ட அதிகாரிகள் அடங்கிய குழு, புட்டிரெட்டிப்பட்டி ரயில்வே கேட் அருகில் ரயில்வே சுரங்க பாதை அமைக்க இடத்தை தேர்வு செய்து ஆய்வு செய்தனர்.