/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
பாலம் அமைக்க மறியலுக்கு முயற்சி மக்களை சமாதானம் செய்த அதிகாரிகள்
/
பாலம் அமைக்க மறியலுக்கு முயற்சி மக்களை சமாதானம் செய்த அதிகாரிகள்
பாலம் அமைக்க மறியலுக்கு முயற்சி மக்களை சமாதானம் செய்த அதிகாரிகள்
பாலம் அமைக்க மறியலுக்கு முயற்சி மக்களை சமாதானம் செய்த அதிகாரிகள்
ADDED : ஜூலை 27, 2025 01:16 AM
தர்மபுரி :தர்மபுரி அருகே, தேசிய நெடுஞ்சாலையில், சிறு பாலம் அமைக்கக்கோரி, மறியலில் ஈடுபட முயன்ற மக்களை, போலீசார், வருவாய் துறையினர் சமரசம் செய்தனர்.
தர்மபுரி அருகே, பெங்களூரு - சேலம் தேசிய நெடுஞ்சாலையில், குண்டல
பட்டி பிரிவு சாலையில், அடிக்கடி விபத்தும் அதனால் உயிரிழப்பும் ஏற்படுகிறது. இதை தடுக்க, தேசிய நெடுஞ்சாலை துறை சார்பில், பாலம் அமைக்கும் பணி நடக்கிறது.
இந்நிலையில், குண்டலபட்டியை சேர்ந்த மக்கள், பஸ் ஸ்டாப்பிலிருந்து, 300 மீ., தொலைவில் பிரிவு சாலையில் பாலம் அமைப்பதால், சேலம் - கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் இருந்து தங்கள் பகுதிக்கு வர, எதிர் திசையில் பயணிக்க வேண்டிய சூழல் ஏற்படும். எனவே, விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளதால், பஸ் ஸ்டாப் பகுதியில், கார் மற்றும் பைக் செல்லும் அளவிற்கு, சிறு பாலம் அமைக்க வலியுறுத்தி, நேற்று அப்பகுதி மக்கள், சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபடுவதாக தெரிவித்தனர். அவர்களிடம், தேசிய நெடுஞ்சாலை துறை உதவி பொறியாளர் கார்த்திக், தர்மபுரி தாசில்தார்
சவுகத்அலி, மதிகோண்பாளையம் இன்ஸ்பெக்டர் கண்ணன் ஆகியோர் பேச்சு வார்த்தை நடத்தினர். 20 நாட்களுக்குள் தேசிய நெடுஞ்சாலைத்துறை ஆணையத்தில் பேசி, நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததால், பொதுமக்கள் கலைந்து சென்றனர். அங்கு வந்த பாப்பிரெட்டிப்பட்டி தொகுதி, அ.தி.மு.க., - எம்.எல்.ஏ., கோவிந்தசாமி பொதுமக்களின் கோரிக்கை
கள் குறித்து, சுமூக தீர்வு காண அதிகாரிகளிடம் கேட்டு கொண்டார்.

