ADDED : அக் 27, 2024 02:20 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஒகேனக்கல்,:கர்நாடகா மற்றும் தமிழக காவிரி நீர்பிடிப்பு பகுதிகளான அஞ்செட்டி, நாட்றாம்பாளையம், கேரிட்டி, கேம்பாகரை, பிலிகுண்டுலு, ராசிமணல் உள்ளிட்ட இடங்களில் பெய்த கனமழையால், தர்மபுரி மாவட்டம், ஒகேனக்கல் காவிரியாற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளது.
பிலிகுண்டுலுவில் நேற்று முன்தினம் மாலை, 5:00 மணிக்கு வினாடிக்கு, 32,000 கன அடியாக இருந்த நீர்வரத்து, நேற்று மாலை, 5:00 மணிக்கு, 35,000 கன அடியாக அதிகரித்தது.
இதனால், ஒகேனக்கல் மெயின் பால்ஸ், மெயின் அருவி, ஐந்தருவி, ஐவர்பாணி, சினி பால்ஸ், உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது.