ADDED : நவ 08, 2024 01:12 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
லாரி மோதி
முதியவர் பலி
பாலக்கோடு, நவ. 8-
பாலக்கோடு அடுத்த கடமடை கிராமத்தை சேர்ந்தவர் முத்துசாமி, 65. விவசாயி. இவர், நேற்று அதிகாலை டீ குடிக்க கடமடை மெயின் ரோட்டிலுள்ள டீ கடைக்கு சைக்கிளில் சென்றார். நெடுஞ்சாலையை கடக்க முயன்றபோது, பாலக்கோட்டில் இருந்து தர்மபுரி நோக்கி வந்த சரக்கு லாரி அவர் மீது மோதியது. இதில், தலையில் படுகாயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே இறந்தார். பாலக்கோடு போலீசார், அவரது உடலை கைப்பற்றி விசாரித்து வருகின்றனர்.