/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
கட்டுப்பாட்டை இழந்த லாரி மோதல்; கார் நசுங்கி ஒருவர் பலி
/
கட்டுப்பாட்டை இழந்த லாரி மோதல்; கார் நசுங்கி ஒருவர் பலி
கட்டுப்பாட்டை இழந்த லாரி மோதல்; கார் நசுங்கி ஒருவர் பலி
கட்டுப்பாட்டை இழந்த லாரி மோதல்; கார் நசுங்கி ஒருவர் பலி
ADDED : ஜன 06, 2025 02:38 AM
தொப்பூர்: தொப்பூர் கட்டமேடு அருகே, கார் மீது லாரி மோதிய விபத்தில், ஒருவர் உடல் நசுங்கி பலியான நிலையில், 4 பேர் படுகாயம-டைந்தனர்.
அரியலுார் மாவட்டத்தை சேர்ந்தவர் சிவக்குமார், 61. இவர் நேற்று கர்நாடகா மாநிலத்தில் இருந்து, அசோக் லேலண்ட் டாரஸ் லாரியில் நெல் லோடு ஏற்றிக்கொண்டு, திருச்சி நோக்கி சென்றார். தர்மபுரி மாவட்டம், பெங்களுரு - சேலம் தேசிய நெடுஞ்சாலையில், தொப்பூர் கட்டமேடு அருகே வந்தபோது, கட்-டுப்பாட்டை இழந்த லாரி, முன்னால் சென்ற போர்ட் கார், பார்சல் மற்றும் கன்டெய்னர் லாரி மீது மோதியது. அப்போது, லாரிகளுக்கு நடுவே சிக்கிய கார் நசுங்கியது. காரில், மஹாராஷ்டிராவில் இருந்து திருநெல்வேலிக்கு சென்ற வில்லியம்ராஜ், 56, என்பவர், உடல் நசுங்கி சம்பவ இடத்தி-லேயே பலியானார். அவரது மனைவி ரேணுகா, 50, மகள் ஜெனிபர், 30 மற்றும் காரை ஓட்டிவந்த ராஜா, 56, லாரி ஓட்டுனர் சிவக்குமார் ஆகியோர் படுகாயமடைந்தனர். இடிபாடுகளில் சிக்-கியவர்களை, தொப்பூர் போலீசார், சாலை பராமரிப்பு குழுவினர் மற்றும் பொதுமக்கள் மீட்டு, ஆம்புலன்ஸ் மூலம், தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மாவட்ட எஸ்.பி., மகேஷ்வரன், சம்பவ இடம் சென்று விசாரணை நடத்தினார்.
இந்த விபத்தால், பெங்களுரு - சேலம் தேசிய நெடுஞ்சாலையில் ஒரு மணி நேரத்திற்கு மேல் போக்குவரத்து பாதித்தது.