/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
குழந்தை தொழிலாளர்களை பணிக்கு அமர்த்தினால் ஓராண்டு சிறை
/
குழந்தை தொழிலாளர்களை பணிக்கு அமர்த்தினால் ஓராண்டு சிறை
குழந்தை தொழிலாளர்களை பணிக்கு அமர்த்தினால் ஓராண்டு சிறை
குழந்தை தொழிலாளர்களை பணிக்கு அமர்த்தினால் ஓராண்டு சிறை
ADDED : செப் 06, 2024 07:18 AM
தர்மபுரி: தர்மபுரி மாவட்ட கலெக்டர் சாந்தி வெளியிட்டுள்ள அறிக்கை: தர்மபுரி மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் சார்பில், அமைக்கப்பட்ட ஒன் ஸ்டாப் கிரைசிஸ் குழுவினர், தர்மபுரி மாவட்டத்தில், குழந்தை தொழிலாளர்கள் முறை ஒழிப்பு தொடர்பாக, வருவாய்த்துறை, தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்ககம், தொழிலாளர் நலத்துறை, சமூக பாதுகாப்பு துறை, போலீசார் ஆகிய துறைகளை சார்ந்த, உறப்பினர்கள் மற்றும் துறை சாரா உறுப்பினர்களுடன் சிறப்பாய்வு, வணிக நிறுவனங்கள் அதிகம் உள்ள பகுதிகளில் மேற்கொண்டனர்.
இதில், அரசு மருத்துவக் கல்லுாரி அருகிலுள்ள, மெக்கானிக் கடையில், 14 வயதுக்கு உட்பட்ட சிறுவன் பணிபுரிவது கண்டறியப்பட்டு, அவரை மீட்டு, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர்கள் மூலம், குழந்தைகள் காப்பகத்தில் ஒப்படைத்தனர். கடை உரிமையாளர் மீது, நீதிமன்ற மேல்நடவடிக்கை தொடரப்பட்டது.
மேலும், தர்மபுரி பஸ் ஸ்டாண்டில் ஆய்வு செய்தபோது, பாசிமணி மற்றும் ஊசிமணி விற்பனை செய்து கொண்டிருந்த, 3 குழந்தைகளை மீட்டு, காப்பகத்தில் ஒப்படைத்தனர். குழந்தை தொழிலாளர்களை பணிக்கு அமர்த்தினால், 20,000 ரூபாய்- அபராதம் மற்றும் ஓராண்டு கால சிறை தண்டனை நீதிமன்றம் மூலம் வழங்கப்படும். மேலும், தர்மபுரி மாவட்டத்தில், குழந்தை தொழிலாளர்கள் யாரேனும் பணிபுரிவது தெரிந்தால் உடனடியாக, 1098 என்ற எண்ணிற்கு தெரிவிக்கலாம். இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.