ADDED : நவ 12, 2024 01:42 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நல்லம்பள்ளி, நவ. 12-
தர்மபுரி மாவட்டம், நல்லம்பள்ளி அடுத்த, மானியதஹள்ளி பஞ்.,க்கு உட்பட மேல்பூரிக்கல் மற்றும் கீழ்ஈசல்பட்டி பகுதியில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை சார்பில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தில், 23.94 லட்சம் ரூபாய் மதிப்பில், இரு இடங்களில் புதிய அங்கன்வாடி கட்டடம் கட்டப்பட்டது. இதை, தர்மபுரி, பா.ம.க., - எம்.எல்.ஏ., வெங்கடேஷ்வரன் நேற்று திறந்து வைத்தார்.
இதில், நல்லம்பள்ளி பி.டி.ஓ., லோகநாதன், ஊட்டச்சத்து அலுவலர் சுகந்திபிரியா, கவுன்சிலர்கள் ஜோதிலட்சுமி, ராஜீவ்காந்தி, பா.ம.க., அமைப்பு செயலாளர் சண்முகம் மற்றும் நிர்வாகிகள் அறிவு, வெங்கடாசலம், பச்சியப்பன், உத்திராணி, ஜெகன், உட்பட பலர் கலந்து கொண்டனர்.